Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th September 2019 20:28:01 Hours

பண்டாரநாயக சர்வதேச ஞாபகாரத்த மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டு நடவடிக்கை பயிற்சிகள்

“நீர் காகம் “கூட்டுப்படைப் பயிற்சி - 2019 பணயக் கைதிகளை மீட்கும் பணிகள் கொழும்பு சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இம் மாதம் (16) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த கூட்டுப்படை அப்பியாச பயிற்சியில் சீனா, மலேசியா, மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இராணுவத்தினரும் இணைந்து கொண்டனர்.

இந்த கூட்டுப்படை பயிற்சியானது 4 ஆவது கொமாண்டோ படையணியின் தலைமையில் 17 பயங்கரவாத துப்பாக்கி முனை அரன்களிலுள்ள 44 பணயக் கைதிகளை மீட்கும் போலியான நடவடிக்கை பணிகளாக விளங்கியது.

இலங்கை விமானப்படைக்குரிய ஹெலிகொப்டர்களின் உதவியுடன் ஆகாயத்திலிருந்து கொமாண்டோ படையணியினர் கயிறுகள் மூலம் இறங்கியும், சினையிபர் சூட்டுத் தாக்குதலை புரிந்து இந்த பணயக் கைதிகளை மீட்கும் பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர்.

இந்த கூட்டு நடவடிக்கை பயிற்சிகளை பார்வையிடுவதற்கு ஜனாதிபதி செயலகத்தின் செயலாளர் திரு உதய செனெவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு தலைமை அதிகாரி அத்மிரால் சி விஜயகுணரத்ன, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வயிஷ் அத்மிரால் பியல் டி சில்வா, இராணுவ பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, கூட்டுப்படை பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே போன்றோர் வருகை தந்தனர். affiliate link trace | Ανδρικά Nike