Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th September 2019 20:27:17 Hours

ரஷ்ய நாட்டின் தூதுவர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை ரஷ்ய நாட்டின் தூதுவரான மதிப்புக்குரிய திரு ஜூரி மெட்டிரி அவர்கள் இராணுவ தலைமையகத்தில் இம் மாதம் (16) ஆம் திகதி சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இராணுவ தளபதியுடன் அவரது பணிமனையில் இடம்பெற்ற கலந்துரையாடலை முன்னிட்டு முகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று தெரிவித்தார்.

இராணுவத் தலைமையகத்திற்கு வருகை செய்ததை முன்னிட்டு ரஷ்ய தூதுவருக்கு இராணுவ தளபதியவர்கள் நன்றியை தெரிவித்த துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இலங்கை இராணுவத்திற்கு வழங்கிய உதவியையும், அத்துடன் எமக்கு வழங்கிய பயிற்சி வாய்ப்புக்களை ஒரு போதும் மறக்கமாட்டோம் என்று தூதுவருக்கு இராணுவ தளபதியவர்கள் கூறினார்.

உரையாடலின் இறுதியில் இராணுவ தளபதியவர்கள் வருகை தந்த ரஷ்ய நாட்டின் தூதுவருக்கு அவரது வருகையை கௌரவித்து நினைவுச் சின்னமொன்றையும் பரிசாக வழங்கி வைத்தார். இச்சந்தர்ப்பத்தில் ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரியும் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

திரு. ஜூரி மெட்டிரி இலங்கைக்கு வருவதற்கு முன்பு ரஷ்ய வெளியுறவு அமைச்சின் தகவல் மற்றும் பத்திரிகைத் துறையின் துணை பணிப்பாளராகவும் இருந்தார். வியட்நாமின் டா நாங்கில் ரஷ்யாவின் துணைத் தூதுவராகவும், பாகிஸ்தானின் கராச்சியில் ரஷ்யாவின் துணைத் தூதுவராகவும், எம்.எஃப்.ஏவின் தகவல் மற்றும் பத்திரிகைத் துறையின் தலைமை ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Asics footwear | Men's Footwear