Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th September 2019 14:54:20 Hours

படையினரால் கெக்கிராவ பாடசாலைக்கு இசை வாத்தியக் கருவிகள் வழங்கிவைப்பு

21 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபத்திரன அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ், 21ஆவது படைப்பிரிவின் படையினரால் கெக்கிராவ கல்குளமவில் அமைந்துள்ள கஹபத்விலகம ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான இசை வாத்தியக் கருவிகளானது மாணிக்க வர்தகரான திரு லாள் குடகம அவர்களின் அனுசரணையின் மூலம் வழங்கப்பட்டன.

கஹபத்விலகம ஆரம்ப பாடசாலை பேன்ட் வாத்தியக்குழு, உள்ளுரில் தயாரிக்கப்பட்ட மூங்கில் தடி மற்றும் ஏனைய இயற்கை இசை வாத்தியக் கருவிகளை பயன்படுத்தி பயிற்சியில் ஈடுப்ட்டதை அவதானித்த 21 பபை;பிரிவின் படையினர், அவர்களின் திறமையினை இனங்கண்டு மாணிக்க வர்தக நன்கொடையாளரிடம் இத்தேவையினை முன்கொண்டு சென்றதோடு இதற்கான முயற்சியினையும் மேற்கொண்டனர்.

அதன்பிரகாரம் அனுசரணையாளர் நவீன இசை வாத்தியக் கருவிகள் குறித்த மாணவர்களுக்கு வழங்கினார்.

மேலும், இவ்வன்பளிப்பானது பிரதம அதிதிகளான 21 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபத்திரன மற்றும் அனுசரணையாளர்; அவர்களின் பங்களிப்போடு கஹபத்விலகம ஆரம்ப பாடசாலையில் கடந்த திங்கட்கிழமை(9) இடம்பெற்றது.

இவ்வைபவத்தின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் 21 ஆவது படைப்பிரிவின் படைத் தலைமையகத்தின் படையினர் மற்றும் அதனுடைய கட்டளை அமைப்புக்கள், கஹபத்விலகம ஆரம்ப பாடசாலை அதிபர், சக ஊளியர்கள், மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.Buy Kicks | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret