Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th September 2019 09:20:44 Hours

இராணுவ தளபதி பேராயரை சந்திப்பு

இலங்கை இராணுவத்தில் புதிதாக பதவியேற்ற இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இம் மாதம் (10) ஆம் திகதி பகல் கொழும்பு 8 இல் அமைந்துள்ள பேராயர் வாசஸ்தலத்தில் பேராயர் கலாநிதி மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை அவர்களை சந்தித்தார்.

பேராயர் வாசஸ்தலத்திற்கு சென்ற இராணுவ தளபதியை பேராயரது தனிப்பட்ட உதவியாளர் கலாநிதி ஐவன் விதானகே, இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன அவர்கள் நுழைவாயிலில் வைத்து வரவேற்றனர்.

பின்னர் இராணுவ தளபதியவர்கள் பேராயரை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார். இதன் போது இராணுவ தளபதியவர்கள் எதிர்காலத்தில் இராணுவ நல்லிணக்க முயற்சிகள், பேரழிவிற்குள்ளான சீயோன் தேவாலயம் மற்றும் கட்டுவபிட்டி தேவாலயத்தின் இராணுவ சீரமைப்பு பணிகள் , தேசத்தை கட்டியெழுப்பும் பணிகளுக்கு இராணுவத்தின் ஒத்துழைப்பு தொடர்பாக பேராயருக்கு விளக்கி கூறினார்.

பேராயர் தன்னை சந்திக்க வருகை தந்த புதிய இராணுவ தளபதியை மகிழ்ச்சியுடன் வரவேற்று அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார். பின்னர் இந்த நாடானது பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருந்த போது இராணுவத்தினரது பங்களிப்பு, அர்ப்பணிப்பு தொடர்பாகவும் தளபதியுடன் பேசினார். எங்கள் நாட்டு மக்களால் போற்றப்பட்ட ஒரு அனுபவமிக்க இராணுவ அதிகாரி என்ற முறையில் நாட்டிற்கு பாதுகாப்பை வழங்குவதற்கான உங்கள் முயற்சிகளில் எனக்கு முழு நம்பிக்கையுள்ளது. அத்துடன் எதிர்வரும் தினங்களில் தேர்தல்கள் இடம்பெறவிருப்பதனால் உங்களுக்கு பாரிய பொறுப்புக்கள் வழங்கப்படும் என்று நினைக்கின்றேன். என்று பேராசிரியர் தளபதிக்கு கூறினார்.

மேலும் பேராயர் இராணுவ தளபதியவர்களுக்கு மனிதாபிமான நடவடிக்கைகளின் போது நாட்டிற்காக அவராற்றிய பாரிய சேவையை கௌரவித்தும் இராணுவத்தில் வெவ்வேறான துறைகளில் சிறப்பான திறன்களை கொண்ட அதிகாரியென்று பாராட்டியும், சர்வதேசத்தினால் இராணுவ தளபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நியாயமற்ற குற்ற அழுத்தங்களுக்கு முகமளிக்க உறுதியாய் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதன் போது பேராயருக்கு இராணுவ தளபதியவர்கள் பதலளிக்கையில் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பயங்கரவாதிகளிடம் பணையக் கைதிகளாக இருந்த 125,000 தமிழ் பொது மக்களுக்கு எவ்வாறு இராணுவத்தினர் மனிதாபிமான ரீதியாக உதவிகளை மேற்கொண்டனர் என்று விளக்கினார். அத்துடன் இந்த நாட்டின் இறையான்மையை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்றும் நியாமற்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நான் பொருட்படுத்த மாட்டேன் என்று கூறினார்.

மேலும் இராணுவ தளபதியவர்கள் கருத்து தெரிவிக்கையில் இராணுவம் எப்போதும் நாட்டின் பாதுகாப்பிற்காக பொறுப்புணர்ச்சியுடன் செயல்படும். அதே நேரத்தில் நாட்டின் அனைத்து பொதுமக்களது பாதுகாப்பையும் உறுதி செய்யும். என்று வலியுறுத்தினார்.

இறுதியில் இராணுவ தளபதி அவர்கள் பேராயரது ஆசிர்வாதத்தையும் பெற்றுக் கொண்டு பேராயர் வாசஸ்தலத்திலுள்ள பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் தனது வருகையை நினைவு படுத்தும் முகமாக கையொப்பமிட்டு விடைபெற்றுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan Sneakers | Nike Releases, Launch Links & Raffles