Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th September 2019 14:17:58 Hours

கூட்டுப் பயிற்சியில் பயங்கரவாதத்தின் பிடியிலுள்ள பணையக் கைதிகளை மீட்கும் நடவடிக்கைகள்

“நீர்க்காகம் கூட்டுப் பயிற்சி 2019” இலங்கை இராணுவம், விமானப் படையினர் மற்றும் பாகிஸ்தான், நேபாள இராணுவத்தினர் இணைந்து கண்டியிலுள்ள கெட்டம்பே பிரதேசத்தில் பயங்கரவாதியிடம் சிக்கியிருக்கும் கண்டியர்களை மீட்கும் நடவடிக்கை பணிகள் இம் மாதம் (7) ஆம் திகதி மேற்கொண்டனர்.

இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் நாவுலையிலுள்ள விஷேட படையணி தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு வரும் வழியில் கண்டி கெட்டம்பே பிரதேசத்திற்கு சென்று இந்த கூட்டுப்படை நடவடிக்கைகளை பார்வையிட்டு உரிய அதிகாரிகளுக்கு இது தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்களையும் வழங்கி வைத்தார்.

கூட்டுப்படை நடவடிக்கையில் கண்டியர்களை மீட்கும் பணிகளில் 4 விஷேட படையணி, , 2 எட்டு பேரைக் கொண்ட விஷேட குழுவணியும், விஷேட மோட்டார் சைக்கிள் குழுவினர்கள் மற்றும் விமானப்படைக்கு சொந்தமான 212 ஹெலிகொப்டர்களை உபயோகித்தும் மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கை பணிகள் மின்னேரியவிலுள்ள கூட்டுப் படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களது பணிப்புரைக்கமைய இடம்பெறுகின்றன.

இந்த போலியான நடவடிக்கையில் பங்கேற்றிக் கொண்ட விஷேட படையணி, கொமாண்டோ படையணி, பொறிமுறை காலாட் படையணி, எயார் மொபைல் படையணிகளுக்கு இராணுபவ தளபதி அவர்கள் இந்த நடவடிக்கைகள் தொடர்பாக தனது அனுபவரீதியான விடயங்களை பகிர்ந்து கொண்டு இவர்களுக்கு உரையொன்றையும் மேற்கொண்டார்.

இந்த உரையின் போது “கடந்த காலத்தை நினைவு படுத்தி கொள்ளுங்கள் சிக்கல்களை தனியாக தீர்க்க முடியாது நாம் அனைவரும் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும். எதரிகளின் நெட்வேர்க் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாக இராணுவத்தின் மிது மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் பெரும் நம்பிக்கையை வைத்துள்ளார். ஆகையால் நாம் தேசிய பாதுகாப்பையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்று கூட்டுப் பயிற்சியில் இணைந்துள்ள படையினரகளுக்கு தளபதி வலியுறுத்தினார். Nike Sneakers Store | Entrainement Nike