Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th September 2019 16:33:23 Hours

இராணுவ தளபதி விஷேட தேவையுடைய இராணுவத்தினருள்ள ராகம ரணவிரு செவனவிற்கு விஜயம்

நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்தத்தின் போது அவயங்களை இழந்து நோய்வாய் பட்டிருக்கும் விஷேட தேவையுடைய படை வீரர்கள் தங்கியிருக்கும் ராகம ரணவிரு செவன நிலையத்திற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது பாரியாரும், இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்ஷன் அவர்களும் இம் மாதம் (4) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டனர்.

இந்த நிலையத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதி மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவியையும் ரணவிரு செவன நிலையத்தின் கட்டனை அதிகாரி பிரிகேடியர் வஜிர காரியவஷம் அவர்கள் வரவேற்றார்.

பின்னர் இராணுவ தளபதி அவரது பாரியார், நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன, இராணுவ தங்குமிட பராமரிப்பு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்களுடன் வாட்டில் இருக்கும் படை வீரர்களது சுபசாதனை விடயங்களை கண்டறிவதற்காக சென்றிருந்தனர்.

அங்கு சென்ற இராணுவ தளபதியவர்கள் வாட்டிலுள்ள படை வீர ர்களது தேவைகள் தொடர்பாக அவர்களுடன் உறையாடி கேட்டறிந்தார். அத்துடன் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி அவர்களினால் வாட்டிலுள்ள படை வீரர்களுக்கு பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன. பின்னர் இராணுவ தளபதியவர்கள் இந்த நிலையத்தினுள் புதிதாக திறந்து வைக்கப்பட்ட செயற்கை உறுப்புக்கள் தயாரிக்கும் நிலையத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

இறுதியில் இராணுவ தளபதியவர்கள் இந்த நிலையத்தில் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டு விடைபெற்றுச் சென்றார். Sport media | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov