Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd September 2019 18:20:20 Hours

படையினரால் அழகியல் திறன்கள் முன்வைத்தல்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் படையணிகளுக்கு இடையில் படையினர்களின் நாடக திறன்களை முன் வைக்கும் நிகழ்வுகள் ஆகஸ்ட் மாதம் 17-19 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இறுதித் தேர்வு போட்டியானது ஆகஸ்ட் மாதம் (27) ஆம் திகதி 64 ஆவது படைப் பிரிவின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள் வருகை தந்தார்.

இறுதிச் சுற்றுப் போட்டிகள் 7 (தொ) ஆவது கெமுனு காலாட் படையணி மற்றும் 17 (தொ) ஆவது கஜபா படையணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் கஜபா படையணி தங்களது திறமைகளை வெளிக்காட்டி வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி அவர்களினால் நாடகங்களில் பங்கேற்றி திறமைகளை வெளிக்காட்டிய சிறந்த நடிகர், நடிகைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் 58, 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Buy Sneakers | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE