Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th September 2019 11:38:28 Hours

படையணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டியில் லெப்டினன்ட் அஜந்த மென்டிஷ் பங்கேற்பு

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த அஜந்த மென்டிஷ் இலங்கை தேசிய கிரிக்கட் அணியில் 15 வருடங்கள் அங்கத்தவராக இருப்பதுடன் பனாகொடையில் படையணிகளுக்கு இடையில் நேற்று (3) ஆம் திகதி இடம்பெற்ற T-20 போட்டிகளில் பங்கேற்றிக் கொண்டார்.

இந்த இறுதிச் சுற்றுப் போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்தார். இவரை இராணுவ கிரிக்கட் சங்கத்தின் தலைவரும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்கள் வரவேற்றார்.

இந்த இறுதிச் சுற்றுப் போட்டியானது இலங்கை பீரங்கிப் படையணி மற்றும் இலங்கை போர்கருவி படையணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இறுதியில் பீரங்கிப் படையணியானது 4 விக்கட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்று வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

இந்த போட்டியில் வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கும் சர்வதேச கிரிக்கட் விளையாட்டு வீரனான லெப்டினன்ட் அஜந்த மென்டிஷ் அவர்களுக்கும் இராணுவ தளபதியவர்கள் வெற்றி கேடயங்களை வழங்கி அவர்களை கௌரவித்தார்.

இந்த இறுதி நிகழ்வில் பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, இராணுவ செயலாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா, முன்னாள் கிரிக்கட் வீர ர்களான ரங்கன ஹேரத், திலகரத்ன தில்ஷான், தினேஷ் சந்திமால், அஞ்ஜலோ மெதியுஷ் இணைந்து கொண்டனர். latest jordans | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE