Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th August 2019 17:15:13 Hours

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் ரஷ்ய பிரதிநிதி ஆற்றிய உரை

பாதுகாப்பு கருத்தரங்கில் 'மின்காந்த நிறமாலையின் இராணுவ இயக்கவியல்' தொடர்பாக ரஷ்ய ஆயுதப்படைகளின் உயரதிகாரியான கேர்ணல் செர்னிஷோவ் பாவெல் வலெரிவிச் அவர்கள் உரையை நிகழ்த்தினார்.

தனது சுருக்கமான உரையின் போது இராணுவத் துறையில் மின்காந்த நிறமாலை பட்டைகள் பயன்படுத்துவது தொடர்பாகவும் அதை மின்னணு யுத்தத்தின் ஒரு பிரிவாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் இவரது உரையின் மூலம் விளக்கி கூறினார்.

"ரேடியோ அதிர்வெண் ஸ்பெக்ட்ரமின் பயன்பாட்டை நிர்வகித்தல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் செயல்திறனுக்காக சர்வதேச விதிமுறைகள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதையும், நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத தகவல் தொடர்பு அமைப்புகளுடன் ஒத்துப்போகிறது" எனும் விடயங்களை கருத்தரங்கில் இவர் கூறினார்.

மின்காந்த கதிர்வீச்சு, மின்காந்த அலைகள், இராணுவக் கோளத்தில் பயன்படுத்தப்படும் மின்காந்த ஸ்பெக்ட்ரம் பட்டைகள், மின்னணு போர், வானொலி அதிர்வெண் ஸ்பெக்ட்ரமின் பயன்பாட்டை நிர்வகித்தல், வானொலி அதிர்வெண் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டின் சர்வதேச கட்டுப்பாடு, சர்வதேச சட்ட பாதுகாப்பு போன்ற துறைகளில் முக்கிய அம்சங்களை உள்ளடக்கி இவரது சிறப்புரையை மேற்கொண்டார். . Running sport media | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ