Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th August 2019 08:48:23 Hours

56 ஆவது தடவையாக இடம்பெற்ற படையணிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள்

இலங்கை இராணுவத்தினால் 56 ஆவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ படையணிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழா இம் மாதம் (28) ஆம் திகதி கொழும்பிலுள்ள சுகததாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டின ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்தார். இவரை இராணுவ தடகள விளையாட்டு சங்கத்தின் தலைவரும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் வரவேற்றார்.

இராணுவத்தால் பயிற்றுவிக்கப்பட்ட 20 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை இந்த போட்டிகளில் பங்கேற்றிக் கொண்டுபெற்றுக் கொண்டனர். மேலும் பல சர்வதேச தடகள போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கை இராணுவத்திலுள்ள 24 படையணிகள் இந்த தடகள போட்டிகளில் பங்கேற்றிக் கொள்ளவுள்ளனர். இந்த போட்டிகள் ஆகஸ்ட் (26) ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கொழும்பிலுள்ள சுகததாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டிகளில் சம்பியனாக இலங்கை பீரங்கிப் படையணி மற்றும் பொறிமுறை காலாட் படையணியினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

லெப்டினன்ட் டங்கன் வைட் தலைமையில் 1950 ஆம் ஆண்டு இராணுவ தடகளக் குழுவில் இருந்து ஒலிம்பிக், கொமன் வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு, தெற்காசிய விளையாட்டு சந்திப்பு, உலக பாதுகாப்பு சேவைகள் தடகள கூட்டம் உள்ளிட்ட பல சர்வதேச சந்திப்புகள் உட்பட இராணுவ விளையாட்டு வீரர்கள். இலங்கைக்கான ஒலிம்பிக் பதக்கம், சிறந்த விருதுகள், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் இராணுவம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதியவர்கள் போட்டிகளில் பங்கேற்றிக் கொண்டு சாதனைகளை நிலைநாட்டிய வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் பிரதி பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் மேற்கு மாகாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு தம்மிக முத்துஹல மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இந்த இறுதி நிகழ்வில் பங்கேற்றிக் கொண்டனர்.

இந்த போட்டிகளில் 4 தேசிய மட்டம், 21 புதிய விளையாட்டு மற்றும் 5 புதிய இராணுவ தடகள பதவேடுகளை வீர ர்கள் முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike Sneakers Store | adidas Yeezy Boost 350