Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th August 2019 15:55:02 Hours

65 ஆவது படைப் பிரிவினால் கிளிநொச்சியில் நலன்புரி திட்டங்கள் முன்வைப்பு

கிளிநொச்சி முழங்காவில் விநாயகர் பொது மைதானத்தில் ‘மனுஷத் தெரன’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 65 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சிறுநீரக கிளினிக் முகாமொன்று இம் மாதம் (24) ஆம் திகதி இடம்பெற்றன.

இந்த கிளினிக் சிகிச்சை முகாமில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த 1832 பொது மக்கள் சுகையீனம் நிமித்தம் மருந்து எடுப்பதற்காக வருகை தந்திருந்தனர். நாளடைவில் ஏற்பட்ட சுகையீனம் நிமித்தம் 28 நோயாளிகளும், 415 மற்றும் 60 நபர்கள் கண் சிகிச்சை மற்றும் பல் கிளினிக்கிற்கு வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த கிளினிக் மூலம் கண் நோயாளிகள் 416 பேருக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 10 நபர்களுக்கு சூரிய மின்சக்தி இயந்திரம், 3 2.5 KV ஜனரேட்டர் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் 4 பாடசாலைகளுக்கு பெறுமதிமிக்க புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

எகெதுகஸ்வெவ மஹா வித்தியாலயத்தில் வைத்து மாணவர்கள் 56 பேருக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாடசாலை சிறார்களுக்கு 25 சத்துணவு பொதிகளும், மாமர கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த வைத்திய சிகிச்சை முகாமில் 2 டொக்டர்கள் மற்றும் 7 வைத்திய உதவியாளர்கள் பங்கேற்றிக் கொண்டனர். அத்துடன் மனுஷத் தெரனையின் தலைவர் திரு மகேஷ் ஜயவர்தன, மற்றும் பிரதிநிதிகளான திரு E.M.H.B மொரகஷ்வெவ, திரு அசங்க பெரேரா போன்றோர் இந்த சிகிச்சை முகாமிற்கு சென்றிருந்தனர்.

மேலும் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும, 652, 653 ஆவது படைத் தளபதிகளான கேர்ணல் பிரபாத் கொடிதுவக்கு மற்றும் கேர்ணல் ஜானக உடவிட மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Adidas footwear | Nike - Shoes & Sportswear Clothing