Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th August 2019 14:10:49 Hours

இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி பிரதிநிதிகள் இராணுவ தளபதியை சந்திப்பு

இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த 16 பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவினர்கள் ஆகஸ்ட் மாதம் (25 – 29) ஆம் திகதி வரை இடம்பெறும் மூலோபாய அருகாமை கல்வி சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டனர். இந்த பிரதிநிதிகளின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் உரம்குமாரத் சுரேஷ் குமார் அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இம் மாதம் (26) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

தலைமையகத்திற்கு வருகை தந்த இந்திய இராணுவ தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் உரம்குமாரத் சுரேஷ் குமார் மற்றும் பிரிகேடியர் நவ்பிரீட் சிங் அளங் அவர்களை இலங்கை இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா அவர்கள் வரவேற்று இராணுவ தளபதியின் பணிமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சென்ற இந்த இந்திய உயரதிகாரிகள் இராணுவ தளபதியை சந்தித்து நல்லுறவு கலந்துரையாடலை மேற்கொண்டனர். இறுதியில் இராணுவ தளபதி மற்றும் இந்திய உயரதிகாரிகளுக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறி கொள்ளப்பட்டன.

இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சூராஜ் பங்ஷஜயா அவர்களினால் இலங்கை இராணுவ கருத்தரங்கிற்கு வருகை தந்திருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த உயரதிகாரி குழுவினருக்கு இலங்கை இராணுவத்தின் தற்போதைய பாத்திரங்கள் மற்றும் பணிகளை விளக்கினார்.

பின்னர் இந்த இந்திய உயரதிகாரிகள் குழுவினர்கள் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய சமாதான படையணி நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய இராணுவ வீரர்களை நினைவு படுத்தி தங்களது கௌரவ அஞ்சலிகளை செலுத்தினர்.

அதன் பின்னர் இந்த உயரதிகாரிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் விமானப்படைத் தளபதியை சந்தித்தனர்.

இந்த தூதுக்குழுவில் இராணுவம், கடற்படை, இந்திய ஆயுதப்படைகளின் விமானப்படை அதிகாரிகள், பங்களாதேஷ் ஆயுதப்படைகள், பூட்டான் ஆயுதப்படைகள், சவுதி அரேபிய ஆயுதப்படைகள் மற்றும் பதினொரு துணைவர்கள் அடங்கிய அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். latest Running | jordan Release Dates