Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th August 2019 18:52:55 Hours

ஜெனரல் ஹெமில்டன் வனசிங்க எனும் பெயரில் புதியவீதி திறந்து வைப்பு

நாட்டிற்காக 40 வருடங்கள் பாரிய சேவைகளை ஆற்றிய இலங்கை இராணுவத்தின் 11 ஆவது இராணுவ தளபதியான ஓய்வு பெற்ற ஜெனரல் ஹெமில்டன் வனசிங்க அவர்களது பெயரில் அவர் வசித்து வந்த தொம்பே மல்வான பிரதேசத்தில் வீதியொன்று இம் மாதம் (24) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இந்த வீதி திறந்து வைப்பானது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மதிப்புக்குரிய ருவன் விஜேவர்தன அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவத்தின் பூரண ஏற்பாட்டுடன் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் இந்த வீதியின் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சுஜீவா நெல்ஷன் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் இணைந்திருந்தனர்.

ஹெமில்டன் வனசிங்க மல்வானையில் பிறந்து கொழும்பு ஆனந்த கல்லூரியில் தனது கல்வியை மேற்கொண்டார். கல்வி மேற்கொள்ளும் காலங்களில் கல்லூரியில் கெடெற் பிரிவில் சாஜன் மேஜராக பதவி வகித்ததுடன் ரயிபல் சூட்டாளராகவும் அங்கம் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இவர் சிலோன் இராணுவத்தில் 1954 ஆம் ஆண்டு இணைந்து சண்டர்ஸ்ட்டில் றோயல் இராணுவ எகடமியில் அடிப்படை பயிற்சிகளை மேற்கொண்டு பின்னர் இலங்கை பீரங்கிப் படையில் இரண்டாம் லெப்டினனாக உட்புகுத்தப்பட்டார். இவரது இராணுவ சேவைக் காலத்தினுள் பல்வேறுபட்ட பதவிகளை மேற்கொண்டு 1988 ஆம் ஆண்டு இராணுவத்தில் 11 ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்பு கூட்டுப்படைத் தளபதியாகவும், பாதுகாப்பு செயலாளராக 1995 ஆண்டு கடமை வகித்துள்ளார். buy footwear | balerínky