Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd August 2019 14:47:36 Hours

விடைபெற்றுச் செல்லும் 22 ஆவது இராணுவ தளபதிக்கு அவரது தலைமையகத்தில் கௌரவ மரியாதைகள்

இலங்கை இராணுவ சேவையில் 35 வருடங்களை பூர்த்தி செய்து ஓய்வு பெற்றுச் செல்லும் முன்னாள் இராணுவ தளபதியான ஜெனரல் மகேஷ் சேனாநாயகவிற்கு பனாகொடையிலுள்ள இவரது பொறியியல் படைத் தலைமையகத்தில் இம் மாதம் 22 ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த முன்னாள் இராணுவ தளபதியை தற்போதைய பொறியியல் படையணியின் படைத் தளபதியும் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் குணவர்தன மற்றும் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் ரவீந்திர டயஸ் அவர்கள் வரவேற்றனர்.

பின்னர் முன்னாள் இராணுவ தளபதி அவர்கள் தலைமையத்தில் எல்லோரது பங்களிப்புடன் இடம்பெற்ற தேநீர் விருந்தோம்பல் நிகழ்விலும் பங்கேற்றிக் கொண்டு குழுப் புகைப்படத்திலும் இணைந்து கொண்டார்.

மேலும் அன்றைய தினம் தலைமையக அதிகாரி விடுதியில் இடம்பெற்ற இரவு விருந்தோம்பலிலும் கலந்து கொண்டு முன்னாள் இராணுவ தளபதி பிரியாவிடை உரையையும் நிகழ்த்தினார். jordan Sneakers | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5