Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th July 2019 22:22:56 Hours

விஷேட படைத் தலைமையகத்தில் புதிய கட்டிடம் இராணுவ தளபதியினால் திறந்து வைப்பு

மாத்தளை நாவுல பிரதேசத்தில் அமைந்துள்ள விஷேட படைத் தலைமையகத்தில் மூன்று மாடிக் கட்டிடங்களைக் கொண்ட புதிய கட்டிட தொகுதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் இம் மாதம் (29) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.

இந்த கட்டிட தொகுதியை திறந்து வைப்பதற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதியை விஷேட படையணியின் மத்திய கட்டளை தளபதி கேர்ணல் சந்திமால் பீரிஸ் அவர்கள் வரவேற்று பின்னர் இராணுவ தளபதி அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

மஹா சங்க தேரரின் தலைமையில் ‘செத் பிரித்’ ஆசிர்வாத பூஜைகளுடன் இந்த புதிய கட்டிட தொகுதி இராணுவ தளபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்த படையினருடன் அவர்களது சுகசெய்திகளை கேட்டு தளபதி உரையாடலையும் மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து தலைமையக வளாகத்தினுள் இராணுவ தளபதி அவர்களினால் மரநடுகை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் இராணுவ தளபதி அவர்களினால் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிடப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் பிரிகேடியர் ஹரேந்திர ரணசிங்க மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.

ஆரம்பத்தில் 1985 ஆம் ஆண்டில் விஷேட படையணியில் ““Combat Tracker Team”” என்று அழைக்கப்பட்ட சிறப்புப் படைகள் இரண்டு அதிகாரிகளையும் 38 படை வீரர்களையும் கொண்டிருந்த இந்த சிறிய அணியானது நடவடிக்கை பணிகளில் மிகவும் சிறந்து விளங்கிய படையணியாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Authentic Nike Sneakers | adidas Ultra Boost 1.0 DNA ZX 9000 Mint - Grailify