Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th July 2019 20:38:59 Hours

பாதுகாப்பு செயலாளர் இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்திற்கு விஜயம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் சாந்த கோட்டகொட அவர்கள் முன்னாள் இலேசாயுத காலாட் படையணியின் மூத்த அதிகாரியாவர். இவர் இம் மாதம் (27) ஆம் திகதி உத்தியோக பூர்வமான விஜயத்தை படையணி தலைமையகத்திற்கு மேற்கொண்டார்.

தலைமையகத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளர் அவர்களை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் வரவேற்றார். பின்னர் பாதுகாப்பு செயலாளரவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பின்னர் பாதுகாப்பு செயலாளர் அவர்கள் படைத் தலைமையக வளாகத்தினுள் நிர்மானிக்கப்பட்டுள்ள நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி மலரஞ்சலிகளை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் படை வீரர்களுடன் பாதுகாப்பு செயலாளர் அவர்கள் உரையாடலையும் மேற்கொண்டார்.

அன்றைய தினம் மாலை இலேசாயுத காலாட் படையணி தலைமையக வளாகத்தினுள் உள்ள அதிகாரிகளின் விடுதியில் இடம்பெற்ற இரவு விருந்தோம்பலிலும் பாதுகாப்பு செயலாளர் மற்றும் அவரது பாரியார் திருமதி சோனியா கோட்டேகொட அவர்கள் இணைந்து கொண்டனர்.

மேலும் இலேசாயுத காலாட் படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி கிரிஷாந்தி முதலிகே, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், ஓய்வு பெற்ற இராணுவ மூத்த அதிகாரிகள் மற்றும் அவர்களது பாரியார்களும் இணைந்திருந்தனர்.

பாதுகாப்பு செயலாளர் அவர்கள் இராணுவத்தில் 36 வருடங்கள் சேவைகளை புரிந்து முக்கிய பதவிகளை வகித்து 2004 ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து ஓய்வூ பெற்று சென்றுள்ளார்.

இவர் இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியாகவும், இராணுவ தளபதியாகவும் கடமை வகித்து பின்னர் இராணுவ சேவையிலிருந்து ஓய்வூ பெற்றுச் சென்றுள்ளார்.

இவரது காலப் பகுதியில் வெற்றிகரமான இராஜதந்திரியாக அவர் உருவாக்கிய அனுபவத்தின் நட்பு உறவுகளும் பிற நாடுகளுடனான எதிர்கால பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு உருதுணையாக அமைந்திருந்தன. Sports brands | Air Jordan 5 Raging Bull Toro Brovo 2021 DD0587-600 Release Date Info , Iicf