Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd July 2019 16:53:28 Hours

பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ‘பிங்கம’ தான நிகழ்வு

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கொடிய பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது பலியான நபர்களின் மூன்று மாத நிறைவை முன்னிட்டு அவர்களது ஆத்மா சாந்தி அடைவதற்காக பாதுகாப்பு அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட அன்னதான நிகழ்வு இம் மாதம் (21) ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் இடம் பெற்றது.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட, அவரது பாரியார் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சோனியா கோட்டேகொட, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களும் அவரது பாரியாருமான இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக, கடற்படை விமானப்படை தளபதிகள் ,இராணுவ பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது பாரியார் திருமதி சுஜீவ நெல்சன், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் தொடர்பாடல் அதிகாரிகள் மற்றும்; பாதுகாப்பு அமைச்சின் மகளிர் அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த பௌத்த சமய நிகழ்வுகள் இடம் பெற்றன.

அமரபுர நிக்கய பௌத்த மகா சங்க பண்டித் கொடுகொட தம்மாவாச மகா நாயக தேரர் அவர்களின் தலைமையில் இந்த தான நிகழ்வு இடம் பெற்றது.

மேலும் பாதுகாப்பு செயலாளர் அவர்கள் ‘தாது’ கும்பத்தை தனது தலையில் ஏந்தியவண்ணம் நடைபவனி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்த வழிப்பாடுகளின் ஊடாக கடந்த பயங்கரவாத தாக்குதலில் போது காமுற்ற நபர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விஷேட பிராத்தனைகளும் இடம் பெற்றன.

இறுதியாக பாதுகாப்பு செயலாளர் முப்படைத் தளபதிகளின் பங்களிப்புடன் அன்னதானம் நிகழ்வும் இடம்பெற்றது. Buy Kicks | New Balance 991 Footwear