Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st July 2019 08:02:16 Hours

நாயறு டைவிங் (உள் நீச்சல்) பயிற்சி கல்லூரியின் வெளியேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பதவிநிலைப் பிரதானியவர்கள்

விசேட படையணி - இலங்கை விமானப் படையணியின் 4அதிகாரிகள் மற்றும் 32 படையினர் உள்ளடங்களான குழுவினர் நாயறு டைவிங் பயிற்சி கல்லூரியின் -06ஆம் பிரிவில் பாதுகாப்பு டைவிங் பயிற்சிகளை நிறைவு செய்துள்ளதுடன் இவர்களது வெளியேற்ற நிகழ்வானது முல்லைத்தீவில் உள்ள நாயாறு கடற்கரையோரத்தில் கடந்த சனிக் கிழமை (20) இடம் பெற்றது.

மேலும் இவ் 90 நாள் இக்கட்டான கடின பயிற்சியில் உள் நீச்சல் முறைகள் அவை தொடர்பான சில நுனுக்க முறைகள் போன்ற விடயங்கள் இதன் போது பயிற்றப்பட்டன. இவ் வெளியேற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கொமாண்டோ படையணித் தளபதியும் இலங்கை இராணுவத்தின் பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டதோடு இப் பயிற்சி கல்லூரியின் -06ஆம் பிரிவில் பயிற்சிகளை நிறைவு செய்த படையினருக்கான வெற்றிக்கிண்ணங்களை வழங்கியதுடன் இந் நிகழ்வில் உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்.

இதன் போது 2ஆவது விசேட படையணியின் கோப்ரல் எஸ் எஸ் கே லேகம்வாசம் சிறந்த பயிலுனராகவும் 4ஆவது விசேட படையணியின் கோப்ரல் எஸ் எம் எச் நுவன் குமார் சிறந்த நீச்சலாளராகவும் மற்றும் 1ஆவது விசேட படையணியின் கோப்ரல் ஆர் டி டி பி ராஜகருணா சிறந்த உடற்கட்டமைப்பாளராகவும் காணப்பட்டதுடன் பிரதம அதிதியவர்களால் பாராட்டுக்களையும் வெற்றிக் கிண்ணத்தையும் வழங்கியுள்ளனர்.

இதன் போது பதவிநிலைப் பிரதானியவர்கள் இப் பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.

மேலும் இந் நிகழ்வில் வருகை தந்த பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரதி தளபதியான பிரிகேடியர் ஹரேன் ரணசிங்க அவர்களால் வரவேற்பப்பட்டதுடன் விசேட படையணியின் கேர்ணல் சந்திமால் பீரிஸ் மற்றும் இப் பயிற்சி கல்லூரியின் மேற்பார்வை அதிகாரியான மேஜர் லங்கா அதுகோரல அவர்களாளும் வரவேற்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளடங்களான அதிகாரிக் குழுவினர் கடற் பயணத்தின் நீச்சல் முறைகளை பார்வையிடச் சென்றனர். அதன் பின்னர் அதிதிகள் புத்தகத்தில் பதவிநிலைப் பிரதானியவர்கள் கையொப்பமிட்டார். அதனைத் தொடர்ந்து பிரிகேடியர் ஹரேன் பிரசன்ன அவர்களால் இவ் அதிகாரியவர்களுக்கான நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. buy footwear | NIKE Chaussures, Sacs, Vetements, Montres, Accessoires, Accessoires-textile, Beaute, Sous-vetements - Livraison Gratuite