Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th July 2019 17:36:52 Hours

நலன்புரி திட்டத்தின் கீழ் கல்வியறிவை மேம்படுத்தும் நிகழ்ச்சி திட்டம்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பொதுமக்களுக்கு தங்கள் சட்ட விவகாரங்களைத் தீர்க்க உதவும் முறைகள் தொடர்பான விழிப்புணர்வை வெளிப்படுத்தும் ஒரு நாள் செயலமர்வு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திலுள்ள ‘நெலும்பியஷ’ கேட்போர் கூடத்தில் இம் மாதம் (13) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த செயலமர்வை இலங்கை சட்டத்தரனி சங்கத்துடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார். இதில் இலங்கை சட்டத்தரனி சங்கத்தின் தலைவர் பிசி கலிங்க இந்திரதிஸ்ஸ, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரும் சிரேஷ்ட வழக்கறிஞருமான அஜித் ரோஹன போன்றோர் இந்த செயலமர்வுகளில் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கி வைத்தனர்.

ஏ.ஓ,ஆர் அதிகாரிகள் மற்றுட் பிற அணிகளும் இந்த நிகழ்வில் பங்குபற்றி ‘சட்ட சலுகைகள், இராணுவ மேலாண்மை, குடும்ப பிரச்சினைகள் தொடர்பான சட்டம் மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பான நடைமுறைகள் தொடர்பான அறிவூட்டல்களை வழங்கி, அதே போல் இதில் பங்கேற்றிக் கொண்ட நபர்களது சந்தேகங்களையும் தீர்த்து வைத்தனர். மேலும் குடும்ப தொடர்பு, தனிப்பட்ட மதிப்புகள் மற்றும் சமூக நடத்தை மற்றும் வாழ்க்கை முறைகள் தொடர்பான வழிமுறைகளையும் இந்த செயமர்வின் மூலம் தெளிவுபடுத்தினார்கள். இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த 700 அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்கேற்றிக் கொண்டு பயணடைந்தனர்.

இதே போல் கடந்த ஜூலை மாதம் 8 – 9 ஆம் திகதிகளில் பொதுமக்களது நலன் கருதி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் 70 இராணுவ அங்கத்தவர்கள் மற்றும் 26 சிவிலியன்களின் பங்களிப்புடன் சிறியளவான செயலமர்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. N.K.G.K நம்மாவத்தா, மகாவேலி அபிவிருத்தி அமைச்சின் பிரதி பணிப்பாளர் திருமதி லத்திகா ஹப்புஆராச்சி மற்றும் உயரதிகாரிகளும் இந்த செயலமர்வில் கலந்துகொண்டு இப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து மேலும் நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான தேவை மற்றும் ஹோட்டல், விவசாயம், கைவினைப்பொருட்கள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மக்கள் அதை எவ்வாறு ஆதரிக்க முடியும் என்ற விளக்கத்தை தெளிவுபடுத்தினர்.

அதனைப் போல் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி வரவேற்புரையை நிகழ்த்தினார் அதன் போது தோட்டக்கலை, நடுகை, பசுமையான சூழலுக்கு அவற்றின் சுற்றுப்புறங்களுக்க பொருளாதார மதிப்புக்களை பெற்றுத் தருகின்ற விடயங்களையும் உள்ளடக்கி உரை நிகழ்த்தினார். Sports Shoes | Air Jordan