Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th July 2019 20:17:22 Hours

பலாலியில் விரைவில் தண்ணீர் தொட்டி அமைக்கும் பணிகள்

யாழ் பாலாலி பிரதேசத்தை நீர்வளங்கள் நிறைந்ததாகவும், விவசாய நோக்கங்களுக்காகவும் மாற்றுவதற்காக யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷனா ஹெட்டியாராச்சி அவர்களின் வழிக்காட்லின் கீழ் யாழ் 10 ஆவது பொறியாளர்கள் படையணி மற்றும் 5 ஆவது பொறியாளர்கள் சேவை படையணி படையணியினரால் தேவையான சாத்தியமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் பலாலியில் ஒரு சதுப்பு வாயில் கொண்டு தண்ணீர் தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த கிணறுகள் படையினருக்கு பயனளிக்கும் வகையில் யாழ் குடாநாட்டில் இராணுவ பண்ணை மற்றும் தேங்காய் சாகுபடி திட்டத்திற்கு மிகவும் தேவையான நீர் வளங்களை வழங்குவதற்காக தேவைப்பட்டால், எதிர்காலத்தில் யாழ்ப்பாண விவசாயிகளுடன் அதிகப்படியான தண்ணீரைப் பகிர்ந்து கொள்ளவும் படையினர்கள் இந்த திட்டத்தை மேற் கொண்டுள்ளனர்.

இந்த ஆரம்ப நிகழ்விற்கு (10) ஆம் திகதி வியாழக்கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷனா ஹெட்டியாராச்சி அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டதுடன் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொறியியளாலர் படையணியின் படையினர் பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர். இந்த தண்ணீர் தொட்டி யாழ் மாவட்டத்தின் வரலாறு செல்லும் வகையில் அமையபடவுள்ளது.

இந் நிகழ்வில் மத பிரமுகர்கள், யாழ்ப் நீர்ப்பாசன பொறியியளாலர் திரு. மூர்த்தி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர் பலரும் கலந்து கொண்டனர். Buy Kicks | Air Jordan 1 Retro High OG University Blue - Gov