Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th July 2019 17:46:31 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மரநடுகை நிகழ்ச்சி திட்டம்

‘துருலிய வெனுவேன் அபி’ எனும் தொனிப் பொருளின் கீழ் வில்பத்து வன பிரதேசங்களில் மரநடுகை நிகழ்ச்சி திட்டத்தின் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது பங்களிப்புடன் இம் மாதம் (7) ஆம் திகதி 500 மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.

இந்த மரக்கன்றுகள் ஹேமாஷ் லங்கா தனியார் நிறுவனத்தின் அனுசரனையில் கல்லாறு பாலம், கஜசிங்கபுரம் மற்றும் வில்பத்து வனப் பிரதேசங்களில் நட்டு வைக்கப்பட்டன.

மேலும் மரநடுகை திட்டத்தின் கீழ் 45,000 மரக் கன்றுகள் நடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த பணிகள் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் H.P.N.K ஜயபதிரன அவர்களது கண்காணிப்பின் கீழ் 213 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் K.A.W.S ரத்னாயக அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் H.P.N.K ஜயபதிரன, 212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் M.P லமாஹேவா, 211 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி L.P.K.C விஜயதுங்க, 213 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் K.A.W.S ரத்னாயக, செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் செயலாளர் திரு K சிவகரன், ஹேமாஷ் அவுட்ரீச் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி திரு மிந்திக திலகரத்ன, பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படை அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் முவ்வினத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். Nike sneakers | NIKE HOMME