Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th July 2019 18:27:53 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 2019 கண்காட்சி

இலங்கை இராணுவ மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 2019 ஆம் ஆண்டிற்கான கண்காட்சி இம் மாதம் (3) ஆம் திகதி மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றது.

இந்த கண்காட்சியில் 21 புதிய கண்டு பிடிப்பாளர் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இவைகள் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.

புதிய வானொலி தொலைத் தொடர்பு சாதனம், மின்சார அரிசி ஸ்டீமர், ஸ்டேன்ட் ஹின்சு இயந்திரம், குளிர்பான போத்தல்கள் மற்றும் வாகான டபிள் சமிக்ஞை உபகரணங்கள் இந்த கண்காட்சியில் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த கண்காட்சி போட்டியின் போது 21 புதிய கண்டுபிடிப்புகள் முன் வைக்கப்பட்டிருந்தன. பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சி அதிகாரிகள், தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் மற்றும் இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் ஏற்பாட்டில் போட்டியாளர்களினால் முன் வைக்கப்பட்ட உபகரணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன இதன் விபரம் கீழ்வருமாறு :-

முதலாவது இடம் –10 ஆவது சமிக்ஞை படையணியைச் சேர்ந்த பதவிநிலைச் சாஜன் சுஜித் குமார (புதிய இன்டர்-இயக்கக்கூடிய ரேடியோ கம்யூனிகேஷன் சிஸ்டம்)

இரண்டாவது இடம் - மின்சார பொறியியல் படையணியைச் சேர்ந்த கெப்டன் வயி ஐ எம் பெரேரா, லான்ஸ் கோப்ரல் டீ ஜி ஸ்வாமகுமார மற்றும் போர் வீரன் டீ ஜி எஸ் உதய குமார (கூட்டாக தயாரித்த மின்சார அரிசி ஸ்டீமர்)

மூன்றாவது இடம் – சிங்கப் படையணியைச் சேர்ந்த கோப்ரல் கே பி சிறி மாள் (ஸ்டேன்ட் கிங்சு இயந்திரம்)

நான்காவது இடம் – முதலாவது மின்சார பொறியியல் படையணியைச் சேர்ந்த டீ எம் பி எம் தசநாயக (குளிர்பான போத்தல்கள்)

ஐந்தாவது இடம் – இரண்டாவது புலனாய்வு படையணியைச் சேர்ந்த சாஜன் டீ எம் எல் திசாநாயக ( வாகன டபிள் சமிக்ஞை உபகரணங்கள்)

கண்காட்சி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டீ ஆர் தர்மசிரி, மீளாய்வு மற்றும் அபிவிருத்தி அதிகாரி திரு ரஞ்ஜன் ஜோசப், பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதி பணிப்பாளர் திரு ஏ ஏ எம் டி அதிகாரி போன்றோர் இணைந்திருந்தனர்.Buy Sneakers | Nike Dunk - Collection - Sb-roscoff