Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th July 2019 17:21:45 Hours

11 ஆவது படைப் பிரிவு கட்டளை தளபதிக்கு பிரியவிடை

குண்டசாலையில் அமைந்திருக்கும் 11 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் திஸ்ஸ நானயகார அவர்களுக்கு இப் படைபிரிவில் இருந்து விடைப் பெற்று செல்லும் நிகழ்வு (05) ஆம் திகதி வெள்ளிக்கிழமை இப் படைப் பிரிவு வளாகத்தில் இராணுவ மரியாதை அணிவகுப்புடன் இடம் பெற்றது.

அதற்கமைய மேஜர் ஜெனரல் வசந்த பண்டார அவர்கள் 11ஆவது படைப் பிரிவிற்கு புதிய கட்டளை தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

2 ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ சிங்க படையணியின் படையினரால் இவருக்கு படைப்பிரிவு வளாகத்தில் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் படையினர்களிடம் உரையாற்றுவதற்கு முன்பு அனைவரினதும் பங்களிப்பிற்கும் நன்றி தெரிவித்தார். அத்துடன் அனைத்து தரப்பினர்களுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.

விடைபெற்று செல்லும் இந்த தளபதி 3ஆவது சிங்க படையணி மற்றும் 19 ஆவது தேசிய பாதுகாப்பு படையணி, 111 ஆவது படைப்பிரிவு மற்றும் ரைபல் படையணியனிகளுக்கு ஜுலை 1-3 வரை தனது விஜயத்தை மேற் கொண்டார். buy footwear | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth