Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th July 2019 13:43:33 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதிக்கு இராணுவ கௌரவ மரியாதைகள்

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களுக்கு காலியிலுள்ள 58 ஆவது படைப் பிரிவுத் தலைமையகத்தில் இம் மாதம் (3) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

58 ஆவது படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியை 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்கள் வரவேற்று பின்னர் படையினரால் அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

பின்னர் படைத் தளபதியினால் அவரது வருகையை நினைவு படுத்தும் முகமாக தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொள்ளப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் , படைத் தளபதிகள் இணைந்து கொண்டனர். Running sport media | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ