Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd July 2019 15:46:11 Hours

முல்லைத்தீவு படையினரால் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான நிகழ்ச்சி திட்டம்

நாடாளவியல் ரீதியாக இடம்பெற்றுவரும் தேசிய போதைப் பொருள் தடுப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் வழிக்காட்டாலின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு தொடர்பான பல்வேறுபட்ட நிகழ்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்ச்சி திட்டங்கள் ஜூன் 19 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 01 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் ஜூன் மாதம் 19 ஆம் திகதி கஜபா படையணியைச் சேர்ந்த லெப்டின ன்ட் கேர்ணல் டி எம் ஜி பீ தென்னகோன் அவர்களின் தலைமையில் படையினர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஜூன் மாதம் 25 ஆம் திகதி 68 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர பகுதிகளில் எல்ஈடீ திரைகளின் மூலம் போதைப் பொருள் தடுப்பு தொடர்பான வீடியோ கண்காட்சிகள் மக்களின் பார்வைக்கு முன்வைக்கப்பட்டன. அதனைப் போல் 59 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டிலும் முல்லைத்தீவு நகர பகுதிகளில் இந்த வீடியோ கண்காட்சிகள் மக்களுக்காக முன்வைக்கப்பட்டிருந்தன.

ஜீன் மாதம் (26) ஆம் திகதி கொக்கிலாயி ஜூனியர் கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு 593 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த கெப்டன் சிறிவர்தன அவர்களினால் விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.

64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஜூன் (28) ஆம் திகதி மன்னன்கண்டல் முன்பள்ளி, ஓட்டுசுட்டான் மஹா வித்தியாலயம், சின்னசல்லம்பன ஈஸ்வரன் பாடசாலை, தண்டுவன் அரசு கலவன் பாடசாலை, முத்தியன்கட்டு வங்கி மற்றும் ஜூவநகர் சமூக மண்டபத்திலும் போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விரிவுரைகள் இடம்பெற்றன.

முதலாவது சமிக்ஞை படையணியின் கேட்போர் கூடத்தில் இம் மாதம் (1) ஆம் திகதி படையினருக்கு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எச் கே கங்காநாத் அவர்களினால் போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன. Best Nike Sneakers | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival