Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd July 2019 17:15:34 Hours

இராணுவ வைத்தியர்களின் அறிவு திறன்களை மேம் படுத்த புதிய வேலை திட்டங்கள்

இராணுவ தளபதி அவர்களின் பணிப்புரைக்கமைய இராணுவ சுகாதார சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்ஞீவ முனசிங்க; இராணுவ மருத்துவ சேவையின் பணிப்பாளர் பிரிகேடியர் கிருஷாந்த பெர்ணான்டோ மற்றும் கொழும்பு இராணுவ மருத்துவமனையின் பணிப்பாளர் கேர்ணல் நிஷாந்த பதிரன ஆகியோர்களின் மேற்பார்வையின் கீழ் கொழும்பு இராணுவ மருத்துவமனையின் மருத்துவ கண்டுபிடிப்புகள் தொடர்பான அறிவை மேம்படுத்தல் மற்றும் இராணுவ மருத்துவ துறையினரை விஞ்ஞான ஆராச்சியை தொடர உதவி வருகின்ற இவ் மருத்துவமனையானது 1000 க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளடக்கியதுடன் நாட்டின் மிக நவீன மற்றும் மிக பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்குகின்றன.

இந்த 'Advanced Life Support' தொடர்பான விரிவான பயிற்சி பட்டறையானது கொழும்பு இராணுவ மருத்துவமனையின் உணர்வகற்றியல் திணைக்களம் மற்றும் அவசர பராமரிப்பு மற்றும் முகாமைத்துவத்தால் கொழும்பு இராணுவ மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் அதே வேலை ஆலோசகர் மயக்க மருந்தியல் நிபுணர் மற்றும் மயக்க மருந்துத் திணைக்களத்தின் தலைமை அதிகாரி கேர்ணல் தகவல பெரேரா மற்றும் கற்கை நெறி பணிப்பாளரும் மயக்க மருந்து ஆலோசகருமான லெப்டினன்ட் கேர்ணல் சம்பிக்க அபேசிங்க அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இலங்கை தீவிரசிகிச்சை மற்றும் மருத்துவ நிபுணத்துவ கல்லூரியினால் ‘மேம்பட்ட வாழ்க்கையின் ஆதரவு’ எனும் தொணிப்பொருளின் கீழ் நடாத்தப்படுகின்ற பயிற்சியானது கடந்த (27) ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

இந்த செயலமர்வின் போது 2 ஆலோசகர்கள் உட்பட 21 மருத்துவர்கள் எவ்வாறு மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சை அழிப்பது என்பது பற்றியும், ஐரோப்பிய கவுன்சில் வழிகாட்டுதல்கள் அமைப்பின் பிரகாரம் மாரடைப்பினை கட்டுபடுத்துவற்கான புதிய நுட்பங்கள் மற்றும் திறன்கள் குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டனர். அதோடு, தேசிய நிகழ்சி திட்டத்தில் 'Advanced Life Support' இற்கு பயிற்சி அளிப்பதற்காக 5 பேர் தெரிவு செய்யப்பட்டதோடு, ‘இப் பயிற்சியின் பின்னர், இந்த இராணுவ மருத்துவர்கள் ஒரு நோயாளியின் உயிரை காப்பாற்றுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த முடியும். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதுமாணி கற்கை நெறிகளில் பங்கேற்க காத்திருக்கும் மருத்துவர்களுக்கான ‘மேம்பட்ட வாழ்க்கை ஆதரவு’ 'Advanced Life Support' குறித்து சுகாதார அமைச்சும் இலங்கையின் முதுமாணி மருத்துவ நிறுவனமும் ஏற்றுக்கொண்ட ஒரே சான்றிதழ் இந்த சான்றிதழ் ஆகும்.

நாடு முழுவதும் உள்ள இராணுவ மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் கொழும்பு இராணுவ மருத்துவமனையில் இந்த பயிற்சி பட்டறையினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், மாதத்தின் ஒவ்வொரு கடைசி புதன்கிழமையும் தாதியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்காக ‘அடிப்படை வாழ்க்கை ஆதரவு’ பாடநெறி வழக்கமாக நடத்தப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் அனைத்து இராணுவ வீரர்களுக்கும் சிபிஆர் பயிற்சி வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. latest Running | Sneakers