Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd July 2019 06:00:35 Hours

இலங்கை இராணுவக் குழு 6 ஆவது கட்டமாக ஐக்கிய நாடுகள் சமாதானப் பணிகளுக்காக தென் சூடான் பயணம்

6 ஆவது கட்ட ஐக்கிய நாடுகள் சமாதானப் பணிகளுக்காக தென் சூடானின் போவிலிள் உள்ள சிரிமெட் 2ஆவது தர வைத்தியசாலையில் சேவையாற்றுவதற்காக 10 இராணுவ அதிகாரிகள் உட்பட 61 இராணுவக் குழுவினர் இன்று காலை (3) பலரின் ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் புறப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் வேண்டுகோளிற்கினங்க ஐக்கிய நாடுகளின் அவசர மருத்துவ சேவை திட்டத்திற்காக இலங்கை இராணுவமானது தனது பங்களிப்பினை சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் கீழ் போவில் உள்ள சிரிமெட் 2 ஆவது தர வைத்தியசாலைக்கு அதிகமாக வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சமாதானப் பணிகளுக்கான நன்றாக திட்டமிடப்பட்ட இத்திட்டத்தில் லெப்டினன் கேர்ணல் ரொஹான் பெணான்டோ அவர்களின் தலைமையில் 10 அதிகாரிகள் மற்றும் 50 இராணுவ படையினர், 5 ஆவது கட்டமாக சேவை நிமித்தம் வெற்றிகரமாக கடமையாற்றிய 49 சமாதான படையினர் இன்று மாலை (3) நாடு திரும்புதலினை முன்னிட்டு, அவர்களுக்கு பதிளாக கடைமையை பொறுப்பேற்பர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் படி, இலங்கையானது ஆபிரக்க நாடுகளுக்கு தங்களது படையினரை சமாதானப் பணிகளுக்காக அனுப்பும் ஒரு அங்கிகரிக்கப்பட்ட நாடாகக் காணப்படுகின்றது.

தென் சூடானை தளமாகக் கொண்ட இந்த புதிய சிரிமெட் மருத்துவமனையானது ஒரு அறுவை சிகிச்சை தியேட்டர், தொழிலாளர் அறை, தீவிர சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, வெளி நோயாளி பகுதி, பல் சிகிச்சை பிரிவு, பல் சிகிச்சை பட்டறை ,மருந்தகம், மருத்துவ பொருட்கள் சேமிப்ப்பக அறை, கதிரியக்கவியல் துறை, மருத்துவ ஆய்வகம், ஈ.சி.ஜி அறை, கருத்தடைத் துறை, உயிர் மருத்துவ பொறியியல் பிரிவு, மருத்துவ கழிவுகளை அகற்றும் பிரிவு, உறைவிப்பான் சவபிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட களம், சலவை பிளஸ் களம், அனைத்து வசதிகளுடன் ஆம்புலேட்டரி, மற்றும் ஒரு ஏரோ-மருத்துவ வெளியேற்ற பிரிவு ஆகிய வசதிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று காலை இவர்களை வழியனுபுவதற்காக விமான நிலையத்துக்கு அனைத்து சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.latest Nike release | Entrainement Nike