Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th June 2019 22:42:55 Hours

கிழக்கு படையினரால் பயிர்ச் செய்கையை மேம்படுத்தும் திட்டம் அறிமுகம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரின் நலன் கருதி பலதரப்பட்ட விழிப்புணர்வு திட்டங்களில் ஒரு புதிய முயற்சியாக வேளாண்மை மூலமாக சுய வேலைவாய்பை மேம்படுத்துவதற்காகவும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் வழிக்காட்டலின் கீழ் கடந்த மாதம் (25) ஆம் திகதி செவ்வாய்கிழமை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் இந்த வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய விவசாயம் தொடர்பான பயனுள்ள பயிர்களை உற்பத்தி செய்வதற்கான தொடர் பயிற்சிகளும், விரிவுரைகளும் பாதுகாப்பு படை தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும் அனைத்து படையினருக்கும் வேளாண்மை திறமைகளையும் பொருளாதாரத்தை நிதி ரீதியாக மேம்படுத்திக் கொள்வதற்கும் தேசத்திற்கும் நன்மையளிக்கும் நோக்கத்தில்; டி.ஜே.சி மா பயிர்செய்கை தொடர்பான விரிவுரையாளர் திரு .ஐ.ஜீ வீரசூரிய அவர்களால் எல்லவல விவசாய தனியார் நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் உதவியாளர் திருமதி ஷந்திமா மதுசானி அவர்களால் விரிவுரைகள் வழங்கப்பட்டன.

ஜூன் 26 ஆம் திகதி தேனீ வளர்ப்பு தொடர்பாக படையினருக்கு ஒரு பயனுள்ள விரிவுரையும் இடம்பெற்றது. 'பிங்கு சம்பத் சூரகிமு சன்விதனாய' எனும் தொனிப் பொருளின் கீழ் செயலாளர் திரு. திஸ்ஸ பண்டார தம்பவிட்ட மற்றும் திரு ஆர் ஏ டி கே எம் ரணவீர அவர்களால் காளான் பயிர் செய்கை தொடர்பாக விரிவுரைகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் நிறைவு நிகழ்வானது தலுகானவிலுள்ள 5 ஆவது இலங்கை இராணுவ மகளிர் (தொண்டர்) படையணி தலைமையகத்தில் கடந்த (27) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயளாலர் திரு என்.கே.ஜீ.கே நிம்மவத்த அவர்கள் வருகை தந்தார்.

மேலும் இந்த நிகழ்விற்கு முதன்மை கைத்தொழில் மற்றும் சமூக வலுவுட்டல் அமைச்சின் செயளாலர் திரு.சசிக வசலகே கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதியும் இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் மனோஜ் முதலிகே, 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கபில உதுலுபொல, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாக பிரதானி பிரிகேடியர் மைக்கல் வன்னியாரச்சி, 232 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ரொஷான் ஜயமான்ன, 233 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ஆர் எல்விடிகல, 5 (தொ) மகளிர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ் ஜி எம் பிரேமதிலக அவர்கள் கலந்து கொண்டனர். Best Authentic Sneakers | Nike for Men