Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th June 2019 12:10:31 Hours

நைஜீரியா இராணுவ உயரதிகாரிகள் பயங்கரவாதத்தின் வெற்றி தொடர்பான விடயங்கள் கற்கை

தியதலாவையிலுள்ள இராணுவ பயிற்சி கட்டளை நிலையத்தில் நைஜீரியா நாட்டின் ஐந்து இராணுவ உயரதிகாரிகள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றதோடு இவர்கள் இம் மாதம் (20) ஆம் திகதி இலங்கை இராணுவ உயரதிகாரிகளுடன் பயிற்சிநெறி தொடர்பான விடயங்களை பரிமாறிக் கொண்டனர்.

நைஜீரிய இராணுவத்தின் தலைமை மற்றும் பயிற்சி மற்றும் மேம்பாட்டு கட்டளைத் தலைவர் மேஜர் ஜெனரல் கே.ஐ.அப்துல்கரீம் அவர்களுடன் மேலும் 4 இராணுவ உயரதிகாரிகள் இம் மாதம் ஜூன் 19 ஆம் திகதி அன்று மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டனர். இவர்கள் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான அனுபவங்கனை அத்தருணத்தில் பகிர்ந்து கொண்டனர்.

அதாவது எல்டிடிஈ பயங்கரவாதம் தோற்கடிப்பு தொடர்பான விடயங்கள் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டன இந்த நைஜீரிய இராணுவ உயரதிகாரிகளை இலங்கை இராணுவ பயிற்சி பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டி எஸ் பங்ஷஜயா அவர்கள் வரவேற்றார்.

'இலங்கை மற்றும் பயங்கரவாதம்', 'இலங்கை இராணுவ 'ஈழப் போர் 1,2,3,4’ மற்றும் 'இலங்கையின் அமைதி செயல்முறைகள்' தொடர்பான விடய தலைப்புகளைக் கொண்டு உரைகள் மேற்கொள்ளப்பட்டன அதன் போது விளக்கங்களும் இந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. அச்சந்தர்ப்பத்தில் இந்த உயரதிகாரிகளினால் சந்தேக கேள்விகளும் எழுப்பப்பட்டன.

மூன்று தசாப்த காலமாக எமது நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கற்றுக்கொண்ட பாடங்களையும், எல்டிடிஈ பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் இலங்கை இராணுவ உயரதிகாரியான பிரிகேடியர் நிஷாந்த ஹேரத் அவர்கள் விளக்கங்களை தெளிவுபடுத்தினார். இதன் போது நைஜீரிய இராணுவ உயரதிகாரிகள் ஆர்வத்துடன் இந்த விளக்கங்களுக்கு தங்களது அவதானத்தை செலுத்தி அவதானித்துக் கொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் போது, விஜயம் செய்த நைஜீரிய இராணுவ உயரதிகாரிகள் எல்டிடிஈ பயங்கரவாதத்திற்கு எதிரான இராணுவ வெற்றிகளைப் பற்றி அதிகம் பேசியதுடன், அந்த சவால்களை முறியடிப்பதில் இலங்கை இராணுவம் எதிர்கொள்ளும் மூலோபாய மற்றும் செயல்பாட்டு சவால்கள் தொடர்பான விடயங்கள் பரிமாறிக் கொண்டனர்.

இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய இடம்பெற்ற இரண்டு நாள் பயிற்சி நெறி கலந்துரையாடல்களில் இலங்கை இராணுவ பேன்ட் மற்றும் கலைப் பணியகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இன்னிசை நிகழ்ச்சிகள் இந்த நைஜீரிய இராணுவ உயரதிகாரிகளை மகிழ்வு படுத்தியது. latest Nike Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov