Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd June 2019 20:41:37 Hours

விசேட பாதுகாப்பு பயிற்சி கல்லூரியில் புதிய வைத்திய மையமானது திறந்து வைப்பு

மாதுரு ஓயாவில் அமைந்துள்ள விசேட பாதுகாப்பு பயிற்சி கல்லூரியில் படையினரின் வெளியேற்ற நிகழ்வானது கடந்த சனிக் கிழமை(22) இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து இப் படையணித் தலைமையக தளபதியவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களுக்கு விடுத்த அழைப்பை ஏற்று இவ் விசேட படையணி பயிற்சி கல்லூரியில் புதிதாக கட்டமைக்கப்பட்ட வைத்திய மையமானது இராணுவத் தளபதியவர்களால் கடந்த வெள்ளிக் கிழமை (21) திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொறியியலாளர் சேவைப் படையினரால் இராணுவத் தளபதியவர்களின் கட்டளைக்கமைய கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் ஆலோசனையுடன் இக் கட்டடத்தின் நிர்மானிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது இப் புதிய கட்டடத்திற்கான திறப்பு விழாவானது விசேட பாதுகாப்பு பயிற்சி கல்லூரியின் தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் காஞ்சன வீரசேகர அவர்களால் மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இவ் விசேட பயிற்சி கல்லூரியின் படையினர்களுக்காக பாரிய அளவிலான பெறுமதி மிக்க வைத்திய உபகரணப் பொருட்களை நன்கொடையாக திரு சேனக ரொட்ரிகோ அவர்கள் வழங்கி வைத்தனர். அதன் பின்னர் பிரதம அதிதியவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் போன்றோர் இப் புதிதாக கட்டமைக்கப்பட்ட நோயாளர்களுக்கான வாட்டு மற்றும் பல பகுதிப் பிரிவுகளை பார்வையிட்டனர்.

அதன் பின்னர் இராணுவத் தளபதியவர்கள் இப் படையினருக்காக அமைக்கப்படவுள்ள மற்றயதோர் கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். அதன் பின்னர் தளபதியவர்கள் இப் புதிய கட்டடத்திற்கு தேவையான பொருட்கள் தொடர்பாக பொறியியல் சேவைப் படையினரிடம் வினவினார். இந் நிகழ்வின் இறுதியில் நன்கொடையை வழங்கிய திரு சேனக ரொட்ரிகோ அவர்களுக்கு இராணுவத் தளபதியவர்கள் நினைவுச் சின்னத்தையும் வழங்கினார். spy offers | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ