Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th June 2019 15:00:04 Hours

மாகாண ரீதியாக இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொசன் போயா நிகழ்வுகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் போதி பூஜைகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் 1500 க்கும் அதிகமான பொதுமக்கள் இணைந்திருந்தனர்.

இந்த நிகழ்வுகள் இம் மாதம் (16) ஆம் திகதி பிரிகேடியர் சம்பத் கொட்டுவேஹொட அவர்களது தலைமையில் அனைத்து சமய தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பச்சலீயி பள்ளி மற்றும் மரதன்கேணி பொலிஸ் அதிகாரிகள், படைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகளது பங்களிப்புடன் இடம்பெற்றது.

வெலிகந்த நகரப் பகுதியில் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களது பூரண ஏற்பாட்டுடன் ‘தன்சல்’ தான நிகழ்வுகள் பராக்கிரம சமுத்திராய நிலையத்திற்கு அருகாமையில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு வெலிகந்த பௌத்த மத்திய நிலையத்தின் வண.தெல்விட மெத்தானந்த தேரர் அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து ஆசிர்வாத பூஜைகளுடன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க அவர்களது பூரண எற்பாட்டில் திருகோணமலை ஜயசுமானரமா மஹா விகாரையில் வண திருகோணமலை ஞானகீர்த்தி தேரர் அவர்களின் தலைமையில் போதி பூஜைகள், பொசன் பக்தி கீதங்கள், தானங்கள் வழங்கி வைத்து விஷேட சமய பிறார்த்தனை நிகழ்வுகளும் இம் மாதம் (20) ஆம் திகதி இடம்பெற்றன. 222 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஜயந்திகம நகரத்தில் வாழும் முஸ்லீம், தமிழ் சமுதாயத்தினருக்கு அன்னதானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் 241, 242 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டுடன் அம்பாறை பௌத்த விகாரையில் பொசன் நிகழ்வுகள் இம் மாதம் (16) ஆம் திகதி இடம்பெற்றது.

மேலும் 241 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இம் மாதம் 16 ஆம் திகதியிலிருந்த 19 ஆம் திகதி வரை கல்முனை ட்ரேடர்ஷ் சங்கத்தின் அனுசரனையில் கல்முனை நகராட்சி மன்றத்தில் தான நிகழ்வுகள் இடம்பெற்றது.

கல்முனை விகாராதிபதி வண ரன்முதுகல சங்கரத்ன தேரர் மற்றும் ஏனைய தேரர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. 241 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் அக்கரைபற்று பிரதேசத்தில் தானங்கள் இம் மாதம் (16) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 651 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் அப்பிரதேசத்திற்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள 880 பேருக்கு அன்னதானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது ஏற்பாட்டில் கிளிநொச்சி, மாங்குளம் மற்றும் மல்லாவி போன்ற பிரதேசங்களில் இம் மாதம் (16) ஆம் திகதி பொசன் போய தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஏ எஸ் ஹேவாவிதாரன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 571, 574 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் பெலிமல், தன்ஷல் ஐஸ்கிறீம், பிஸ்கட், பனிஸ் தான நிகழ்வுகள் கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தினுள் இடம்பெற்றது.

65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே ஏ டப்ள்யூ குமாரப்பெரும அவர்களது ஏற்பாட்டில் கிளிநொச்சி மாங்குளம், மல்லாவி போன்ற பிரதேசங்களில் தான நிகழ்வுகள் இடம்பெற்றது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்ஷிரி வடுகே அவர்களது வழிக் காட்டலின் கீழ் கும்புகன் சந்தி, மொனராகலை பிரதேசங்களில் 121 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி சந்தன சோமவீர அவர்களது தலைமையில் இம் மாதம் (16) ஆம் திகதி தான நிகழ்வுகள் இடம்பெற்றது.

பல்லேகலை ‘விரு கெகுலு’ முன்பள்ளி வளாகத்தினுல் இம் மாதம் (18) ஆம் திகதி தான நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணயக்கார மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

10 ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டின ன்ட் கேர்ணல் ருவன் எகலபொல அவர்களது பூரண ஏற்பாட்டில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் பொது மக்கள் 2000 பேருக்கு அன்னதானங்கள் பொசன் போயா தினத்தன்று வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது 23 ஆவது படைப் பிரிவின் பதவிநிலை கேர்ணல் வசந்த பண்டார மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Nike air jordan Sneakers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092