Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th June 2019 13:20:25 Hours

வில்பத்து மரநடுகை திட்டத்திற்கு கண்டியிலுள்ள முன்னனி நபர் மற்றும் மாணவர்களது உதவிகள்

‘துருலிய வெனுவென் அபி’ எனும் தொனிப் பொருளின் கீழ் வில்பத்து பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட மரநடுகைத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் முகமாக விலங்கு உரிமை ஆர்வலரும் பிரசித்திப் பெற்ற பிராண்ட் ஐகானுமான செல்வி ஒட்டாரா குணவர்தன அவர்கள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களை இம் மாதம் (13) ஆம் திகதி சந்தித்தார்.

செல்வி குணவர்தன தனது முழு உதவியை வழங்கியதோடு, சிலாவத்துரை பகுதியில் உள்ள சின்னாத் நகரில் மரக்கன்றுகளை நடும் பணிகளிலும் ஈடுபட்டார்.

பின்னர் இந்த மரநடுகைத் திட்டத்திற்கான அறிவுறுத்தல் மற்றும் முக்கிய தகவல்கள் தொடர்பான விடயங்களை அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார மற்றும் 542 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி கேர்ணல் ரவி ஹேரத் அவர்களுடன் இணைந்து பார்வையாளர்களுக்கு இந்த மரநடுகை தொடர்பான விளக்கத்தையும் அளித்தார்.

இந்த விஜயத்திற்கு மக்கள் வங்கி, வவுனியா கிளை மற்றும் பிராந்திய மேலாளர் திருமதி வன்னிகீதா கனகசபை, மக்கள் வங்கி பிராந்திய கிளையின் பாதுகாப்பு கண்காணிப்பாளர் வவுனியா மேஜர் (ஓய்வு) உஷாந்த தசநாயக, மக்கள் வங்கி முருங்கன் கிளை மேலாளர் திரு. ராஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், 'துருலியா வெனுவென் அபி' எனும் தொனிப் பொருளின் கீழ் வில்பத்து மரநடுகை வளர்ப்பு திட்டத்திற்காக கண்டி பாடசாலை மில்லினியம் உறுப்பினர்கள் 1000 மதிப்புமிக்க மரக்கன்றுகளையும், 10.000 கிலோ உரம் வகைகளும் 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணாயக்கார அவர்களுக்கு இம் மாதம் (14) ஆம் திகதி கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், படை வீரர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்திருந்தனர். buy footwear | Nike Dunk - Collection - Sb-roscoff