Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th June 2019 17:15:18 Hours

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணு பயிற்சிகள்

இலங்கை இராணுவ பொறியியல் படையணியின் ஏற்பாட்டில் எம்பிலிபிடியவிலுள்ள இராணுவ பொறியியல் பயிற்சி பாடசாலையில் இரண்டாவது தடவையாக இடம்பெற்ற இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணு பயிற்சிகள் இம் மாதம் (7) ஆம் திகதி நிறைவுற்றது.

இந்த பயிற்சிகள் மே மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகி ஜீன் 7 ஆம் திகதி கண்காட்சி நிகழ்வுகளுடன் நிறைவுற்றது. இந்திய இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் தரத்திலுள்ள ஒரு அதிகாரியும், இரண்டு படையினர் உட்பட இலங்கை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 14 அதிகாரிகளும், 21 படை வீரர்களும் பங்கேற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் பொறியியல் படையணியின் படைத் தளபதி, பொறியியல் பிரிக்கட் படைத் தளபதி பிரிகேடியர் ஏ என் அமரசேகர, பொறியியல் படையணியின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் என் கே எல் எஸ் ஆர் டயஸ் இராணுவ பயிற்சி பணியகத்தைச் சேர்ந்த கேர்ணல் டப்ள்யூ ஏ எஸ் ஆர் விஜயதாஸ மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

இதற்கு முன்பு இடம்பெற்ற முதலாம் கட்ட பயிற்சியானது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் முதலாம் திகதி நிறைவுற்றது.

இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறைக் கவுன்சில், கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், 1990 சுவாசிரியா அம்புலன்ஸ் சேவை பயிற்சிகள் கடற்படை (CBRN) மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் இராணுவ பொறியியல் படையணியைச்சேர்ந்த 14 அதிகாரிகள் மற்றும் 20 படையினர்கள் இந்த பயிற்சிகளை மேற்கொண்டனர். bridge media | シューズ