Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th June 2019 15:21:06 Hours

புதிய இராணுவ பொது நிர்வாக பிரதானி நியமிப்பு

இலங்கை இராணுவ தலைமையகத்தின் புதிய பொது நிர்வாக பிரதானியாக மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஆர் தர்மசிறி அவர்கள் இன்று பகல் (12) ஆம் திகதி சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களுடன் மங்கள விளக்கேற்றி தனது பதவியை பொறுப்பேற்றார்.

மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்வதன் நிமித்தம் இந்த பதவிக்கு சபுகஸ்கந்த பாதுகாப்பு பதவிநிலை கட்டளை கல்லூரியின் பிரதி கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஆர் தர்மசிறி அவர்கள் நியமிக்கப்பட்டார்.

இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த இவர் சிங்கப் படையணியில் கட்டளை அதிகாரியாகவும், படைத் தலைமையகத்தின் பிரதி கட்டளை தளபதியாகவும் கடமை வகித்துள்ளார்.

இவர் 1985 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கெடெற் பயிற்சி நிறைவின் பின்பு சிங்கப் படையணிக்கு உட்புகுத்தப்பட்டார். பின்னர் இவர் 51, 66, 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாகவும், 593 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியாகவும், ஹயிடி நாட்டுக்கு ஜக்கிய நாட்டு சமாதான படையணிக்கு கட்டளை தளபதியாகவும் , காலாட் பணியகத்தின் பணிப்பாளராகவும், சிங்கப் படையணியின் பிரதி கட்டளை தளபதியாகவும், மின்னேரிய காலாட் பயிற்சி முகாமில் சிரேஷ்ட பயிற்றுனராகவும் மற்றும் அம்பாறை கம்பட் பயிற்சி மையத்தில் தலைமை பயிற்றுனராகவும் கடமை வகித்துள்ளார்.

இலங்கை இராணுவ பதவிநிலை கட்டளை கல்லூரியில் பட்டதாரி பட்டத்தையும்,. இலங்கை மனித உரிமைகள் நிறுவனத்தின் டிப்ளோமா பட்டத்தையும், சீனாவில் பாதுகாப்பு ஆய்வுகள் கல்லூரியில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய படிப்புகளையும், பாடநெறி உட்பட பல தொழில்முறை கல்விகளையும், காலாட்படை மற்றும் தந்திரோபாய பாடநெறி பயிற்சிகளையும், பாகிஸ்தான், ஜூனியர் கட்டளை மற்றும் பதவிநிலை பாடநெறிகளையும், பங்களாதேஷ இளம் அதிகாரிகளுக்கான பாடநெறி, இந்தியா அதிகாரி ஆயுத பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Running | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News