Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd June 2019 19:38:49 Hours

பழைய தர்மராஜா கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘பிரானாம அபிநந்தன’ நிகழ்வு

கண்டி தர்மராஜா கல்லூரியைச் சேர்ந்த இராணுவ மூத்த அதிகாரிகள் 7 பேருக்கு கௌரவமூட்டும் ‘பிரானாம அபிநந்தன’ நிகழ்வு கடந்த மே மாதம் (29) ஆம் திகதி கல்லூரியின் அதிபர்கள், ஆசிரியர்கள், 1979 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் சங்க அங்கத்தவர்கள் மற்றும் பாடசாலை நிருவாகத்தினரது பங்களிப்புடன் இடம்பெற்றது.

இலங்கை இராணுவத்தில் பதில் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வஜீர பலிகக்கார, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு, பிரதான பாதுகாப்பு பதவி நிலை அலுவலகத்தின் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் நிர்மல தர்மரத்ன, இராணுவ தலைமையகத்தின் பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன, இராணுவ விடுதி மற்றும் தங்குமிட பராமரிப்பு பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சி எம் டீ பி சந்திரசேகர, 14 ஆவது படைப் பிரிவின் பிரதி படைத் தளபதி பிரிகேடியர் எச் ஈ எம் ஆர் பீ டி ஹத்னாஹொட, கிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி பிரிகேடியர் ஏ டீ எல்வட போன்ற மூத்த அதிகாரிகளுக்கு இந்த கௌரவ நிகழ்வு இடம்பெற்றது.

இந்த உயரதிகாரிகள் 1979 ஆம் ஆண்டு இக்கல்லூரியில் சாதரன பொது தராதர பரீட்சையில் சித்தியடைந்து 1980 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை சித்தியின் பின்பு இலங்கை இராணுவத்தில் இணைந்தவர்கள் ஆவர்.

இந்த உயரதிகாரிகள் கல்லூரி நுழைவாயிலில் வைத்து அதிபர், பழைய மாணவர் சங்க அங்கத்தவர்கள், கல்லூரி பேன்ட் இன்னிசை வாத்திய குழுவினர் மற்றும் கல்லூரி கெடற் குழுவினரது அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர். பின்னர் இந்த உயரதிகாரிகள் கல்லூரி வளாகத்திலினுள் இருக்கும் படைவீரர் நினைவு தூபிக்கு சென்று தங்களது கௌரவ அஞ்சலியை செலுத்தினார்கள்.

மனிதாபிமான நடவடிக்கைகளின் போது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி அஞ்சலி செலுத்தியதன் பின்பு கல்லூரி பேன்ட் இன்னிசை குழுவினர் மற்றும் கெடெற் அணிவகுப்பு மரியாதையுடன் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்தவர்களின் வரவேற்புடன் இவர்கள் பிரதான மண்டபத்திற்கு அழைத்து சென்று இந்த நிகழ்வு ஆரம்பமானது.

இந்த நிகழ்வின் போது இந்த உயர் இராணுவ அதிகாரிகள் தங்கள் தொழில் துறையில் சிறந்த வளர்ச்சியை பெற்றுக் கொண்டதை முன்னிட்டு இவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.

நாட்டிலுள்ள புகழ்பெற்ற பாடசாலை நிர்வாகிகளில் உயர் பதவியில் இருக்கும் முன்னாள் தலைமை அதிபர் ஏ.பீ. கூனாரத்ன அவர்கள் இந்த நிகழ்வின் போது சிறப்புரையை ஆற்றினார்.

இந்த நிகழ்வில் கண்டி மாவட்ட செயலாளர் அவர்களும் இணைந்து கொண்டார். url clone | adidas poccnr jumper dress pants size