Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th February 2019 13:44:06 Hours

‘பியவர’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சியம்பலாவையில் முன்பள்ளி திறந்து வைப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் ஹேமாஷ் அவுட்ரீச் பவுன்டேஷன் அமைப்பின் அனுசரனையில் 50 ஆவது முன்பள்ளி பாடசாலை அநுராதபுரம் சியம்பலாவையில் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

2002 ஆம் ஆண்டு பியவர நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இந்த முன்பள்ளி பாடசாலைகள் நிர்மானிக்கும் திட்டங்கள் ஹேமாஷ் அவுட்ரீச் பவுன்டேஷன் அமைப்பின் பணிப்பாளர் திருமதி சிரோமி மாஷகோராலா அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

புணரமைக்கப்பட்ட 50 ஆவது இந்த முன்பள்ளி பாடசாலை திறப்பு விழாவில் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, ஹோமாஷ் ஹேமாஷ் அவுட்ரீச் பவுன்டேஷன் அமைப்பின் பணிப்பாளர் திருமதி சிரோமி மாஷகோராலா, 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயபதிரன அவர்கள் கலந்து கொண்டனர்.

‘பியவர’ நிகழ்ச்சி திட்டத்தன் கீழ் நிர்மானிக்கப்பட்டுள்ள 50 முன்பள்ளி பாடசாலைகளில் 3500 சிறார்கள் கல்விகளை மேற்கொள்ளுவதோடு, 150 ஆசரியர்கள் கல்விகளை கற்றுக் கொடுக்கின்றனர். latest Running Sneakers | Nike