Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st December 2018 21:44:18 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் தலைமையில் இடம் பெற்ற நத்தார் கொண்டாட்ட நிகழ்வுகள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் தலைமையில் நத்தார் தின நிகழ்வுகள் கிறித்தவ மதத் தலைவர்களின் பங்களிப்போடு மட்டக்களப்பில் கடந்த புதன் கிழமை(19) இடம் பெற்றது.

மேலும் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்களால் முதன் முறையாக அம்பாரை மாவட்ட செயலாளரான திரு டீ எம் எல் பண்டாரநாயக்க அவர்களுடனான கலந்துரையாடல் மற்றும் அபிவிருத்தி நல்லிணக்க விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படைத் தளபதியவர்கள் 24ஆவது படைத் தலைமையகத்;திற்கும் தனது விஜயத்தை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அம்பாரையில் தனது விஜயத்தைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் ஜயசேகர அவர்கள் அம்பாரை மாவட்ட முஸ்லிம் மதத் தலைவர்களை நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலில் சந்தித்தார்.

மேலும் அம்பாரை முஸ்லிம் சங்கத்தினரின் தலைமையில் கல்முனை; ஜும்மா பள்ளிவாசலின் திரஸ்தி மொஹைதீன் கணக்காளர் சங்கத்தின் தலைவரான வைத்தியர் எஸ் எம் ஏ அசீஸ் அவர்களோடு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் இணைந்து எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி முறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அந்த வகையில் 2018ஆம் ஆண்டிற்கான நத்தார் தின நிகழ்வுகள் கிறிஸ்மஸ் அங்கிலிக் ஈவ் எனும் தலைப்பில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 231ஆவது படைப் பிரிவினர் ஒன்றினைந்து இந் நிகழ்வை நடாத்தியுள்ளனர். மேலும் இந் நிகழ்வில் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்கள் பிரமத அதிதியாக கலந்து கொண்டதுடன் 231ஆவது படைப் பிரிவின் தளபதியவர்களும் கலந்து கொண்டார்.

அதனதை; தொடர்ந்து இந் நிகழ்விற்கான ஒருங்கிணைப்பை கிறிஸ்தவ சமூகத்தினர் 23ஆம் மற்றும் 231ஆவது படைப் பிரிவினருடன் இணைந்து நடாத்தியுள்ளனர். இந் நிகழ்வில் வண்ணமயமான வரவேற்பு நடனம் நிகழ்த்தப்பட்டதோடு வரவேற்புரையானது பாதிரியார் ரொஹான் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மட்டக்களப்பு மாவட்ட ஆயரான ஜோசப் பொன்னையா மற்றும் அப்பாரை நாவற்குடா கல்முனை போன்ற ஆலயங்களின் குழுவினரும் சிசிலியா மகளிர் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் இராணுவ கிறிஸ்தவ சங்கத்தினர் போன்றோர் இணைந்து கரோல் நிகழ்வுகளை மேற்கொண்டுள்ளனர்.  

இந் நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளரான திரு எம் உதயகுமார் மட்டக்களப்பு மாவட்ட மேயரான திரு டி சரவணபவன் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரான திரு நுவன் வெதசிங்க மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரான திரு சித்திரவேல் கிழக்கு பாதுகாப்பு படை முன்னரங்க தளபதியான மேஜர் ஜெனரல் மனோச் முதலிகே மின்னேரிய காலாட் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் சுராஜ் பங்சஜயா மாதுறுஒய பயிற்றுவிப்பு கல்லூரியின் தளபதியான மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்தின 23ஆவது படைத் தளபதியான பிரிகேடியர் கபில உடலுப மற்றும் 231ஆவது படைத் தளபதி போன்றோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அம்பாரையில் உள்ள மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்கள் 3(தொண்டர்) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 16ஆவது தேசிய பாதுகாப்பு படையணி போன்றவற்றி;ற்கு கடந்த புதன் கிழமை(19) விஜயம் செய்தார். jordan Sneakers | Nike Shoes