Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th December 2018 10:51:09 Hours

பூவரசன்குளத்தின் வீதிகள் சிரமதானப் பணிகளின் மூலம் திருத்தற்பாடு

61ஆவது படைப் பிரிவின் இராணுவப் படையினரால் வெல்லன்குளம் இரனைஇலுப்பம் குளம் காக்கையன் குளம் பெரியவளாயன்காடு போன்ற பிரதேசங்களில் காணப்படும் வீதிகள் மழை நீர் காரணமாக சேதமாக்கப்பட்டு காணப்பட்டதுடன் இதன் இருநாள் புணரமைப்புப் பணிகள் பூவரசன்குளம் துனுக்காய் வீதிகளில் மேற்கொள்ளப்பட்டதுடன் இவ் வீதிகள் பல்லாயிரக்கணக்கான கிராம வாசிகள் பயன்படுத்தும் வீதியாக காணப்படுகின்றது.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட காலங்களில் ஏற்பட்ட மோசமான காலநிலை மாற்றம் காரணமாக இவ் வீதிகளில் பயணிப்பதற்கான சிரமத்தை பொதுமக்கள் எதிர் கொண்டனர். மேலும் வாகனங்களினூடக மற்றும் கால்நடையாகக் கூட பயணிக்க முடியாத சிரமத்தை இப் பிரதேச வாசிகள் எதிர் கொண்டனர்.

எப்படியாயினும் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் ஆசிகளோடு 61ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் கே டீ சி ஜி ஜெ திலகரத்தின அவர்களின் தலைமையில் கடந்த இரு தினங்களில் (12 -13 டிசெம்பர்) இச் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்;டது.

மேலும் இவ் வீதிப் புணரமைப்பு பணிகள் முழுமையானதோர் திருத்தற்பாட்டிற்குள் வந்துள்ளது. Asics shoes | Air Jordan Release Dates Calendar