Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th December 2018 17:56:50 Hours

இராணுவ பொது சேவைப் படையணியின் வருடாந்த பூர்த்தி நிகழ்வு

இலங்கை இராணுவத்தின் பொது சேவைப் படையணியின் 67 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தனது தலைமையகத்திலுள்ள ‘இராணுவ நினைவு தூபி’ வளாகத்தினுள் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு படுத்தி நிகழ்வொன்று (7) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ பொது சேவைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வஜீர பலிகக்கார அவர்கள் வருகை தந்தார். இவரை படையணி தலைமையகத்தின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் சானக வேரஹொட அவர்கள் வரவேற்றார்.

பின்னர் நிகழ்வின் ஆரம்பமாக தேசிய கீதம், இராணுவ மற்றும் படையணி கீதங்களை இசைக்கப்பட்டன. அதன் பின்னர் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்தருணத்தில் இராணுவ பொதுசேவைப் படையணியைச் சேர்ந்த உயரதிகாரியான மேஜர் ஜெனரல் பரீஸ் யூஷப், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், படை வீரர்கள் இணைந்திருந்தனர்.

மேலும் இந்த படையணியைச் சேர்ந்த படை வீரர்களது விதவை மனைவிமார்கள், பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் கலந்து கொண்டனர். இந்த படையணியைச் சேர்ந்த 5 அதிகாரிகள் உட்பட 69 படை வீரர்கள் தாய் நாட்டின் நிமித்தம் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.

அன்றைய தின இரவு பௌத்த சமய ஆசிர்வாத பூஜைகளும் 35 பௌத்த தேரர்களது பங்களிப்புடன் பிரித் ஹீன் அன்னதானங்களும் (8) ஆம் திகதி இடம்பெற்றன. Sports brands | Nike Releases, Launch Links & Raffles