Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th December 2018 18:56:50 Hours

வன்னியில் கர்ப்பணித் தாய்மார்களுக்கு இராணுவத்தினரால் உதவிகள்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 56 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டுடனும், பிலியந்தல பிரஷாத் டெக்‌ஷ்டைலின் உரிமையாளர் திருமதி எம் கொலம்பஹே அவர்களது அனுசரனையில் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த 50 கர்ப்பணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து, உடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் உள்ளடக்கிய பொதிகைகள் நன்கொடையாக (1) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வழங்கப்பட்டது.

வன்னி மாவட்டத்திலுள்ள நந்திமித்ராகம, நாமல்கம. சலலிஹினிகம, போகஸ்வெவ 1, போகஸ்வெவ 2, கொக்கிலாய் மற்றும் ஓமந்தை பிரதேசங்களில் உள்ள கர்ப்பணித் தாய்மார்களுக்கு இந்த பொதிகள் வழங்கப்பட்டன.

இந்த பணிகள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது எண்ணக்கருவிற்கமைய 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிலியந்தல பிரஷாத் டெக்‌ஷ்டைலின் உரிமையாளர் திருமதி எம் கொலம்பகே மற்றும் 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய அவர்கள் இணைந்து கொண்டனர். Nike Sneakers | nike fashion