Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th November 2018 21:19:49 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் தமது படைத் தலைமையகத்தில் இருந்து விடை பெற்றார்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வெல அவர்கள் இராணுவத்தில் 36 வருட கால சேவையை ஆற்றியதுடன் தனது சேவை நிறைவை முன்னிட்டு 24ஆம் திகதி நவம்பர் மாதம் 2018 ஓய்வு பெறவுள்ள இத் தளபதியவர்கள் திங்கட் கிழமை (19) இப் படைத் தலைமையகத்திலிருந்து விடை பெற்றார்.

இதன் போது இப் படைத் தலைமையகத்தினால் இராணுவ அணிவகுப்பு மரியாதை போன்றன கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்களுக்கு வழங்கப்பட்டது.

சில நிமிடங்களின் பின்னர் பிரதம அதிதியவர்களுக்கு 7ஆவது பொறியியலார்ப் படையினரால் அணிவகுப்பு மரியாதை போன்றன இடம் பெற்றன.

இதனைத் தொடர்;ந்து ஓய்வூ பெறும் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்களால் இப் படைத் தலைமையக வளாகத்தில் மரக் கன்றும் நடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்களால் குழுப் புகைப்படமும் எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து படையினருடனான மதிய விருந்துபசார நிகழ்வூம் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் அனைத்து படையினருக்குமான உரையை நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் 22ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர 24ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே 23ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் கபில உடலுபொல ஒருங்கிணைப்பு அதிகாரியான புனானை பிரிகேடியர் வசந்த மாதொல மற்றும் பல கட்டளை அதிகாரிகள் படையினர் போன்றௌர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அன்று மாலை அதிகாரிகளுக்கான உணவூ விடுதியில் விருந்துபசார நிகழ்வூம் இடம் பெற்றது. இதன் போது இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகான பொலிஸ் அத்தியட்சகரான திரு கபில ஜயசேகர மற்றும் பல உயர் அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

இதன் போது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக அதிகாரியயான பிரிகேடியர் சாந்த ஹேவவிதாரண நிர்வாக அதிகாரியான பிரிகேடியர் மைக்கல் வன்னியாராச்சி போன்றௌர் இணைந்து கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்களுக்கு நினைவூச் சின்னத்தையும் வழங்கி வைத்தனர்.

இதன் பேHது மேஜர் ஜெனரல் சந்துசித்த பன்னவெல அவர்கள் தமது பிரியாவிடையின் இறுதி உரையில் தமது வாழ்த்துக்களையூம் பாராட்டுக்களையூம் படையினருக்கு தெரிவித்ததோடு பிரதம அதிதிகள் புத்தகத்தில் தமது எண்ணக்கருவையும் எழுதினார்.

அத்துடன் மேஜர் ஜெனரல் சந்துசித்த பன்னவெல அவர்களுக்கான பிரியாவிடை மரியாதை நிகழ்வூம் இடம் பெற்றது. Buy Sneakers | New Releases Nike