Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th October 2018 11:25:29 Hours

கிளிநொச்சியில் இடம் பெற்ற படையினரின் உடல் வலுப்போட்டிகள்

கிளிநொச்சி படையினரின் உடல் வலுப் போட்டிகள் மற்றும் சாகசங்கள் போன்றன கடந்த புதன் கிழமை (17) பரவிபாஞ்சான் மைதானத்தில் மாவட்ட ரீதியில் 34 படைப் பிரிவுகளை உள்ளடக்கி இடம் பெற்றது.

மேலும் இப் போட்டிகளில் கலந்து கொண்ட கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் நிஷ்ஷங்க ரணவன அவர்கள் இறுதியாக 7 போட்டியாளர்களை தெரிவு செய்ததுடன் ட்ரக் வண்டியின் டயர் உருட்டுதல் (100 மீ) தோள் மீது 4 பேரை சுமந்து செல்லல் 25 நீர் பாத்திகளை துhக்கிச் செல்லல் (ஒவ்வொன்றும் 20 லீற்றர்) மற்றும் 25 மண் சாக்குகளை சுமந்து செல்லல் (ஒவ்வொன்றும் 20 கிலோ) டிராக்டர் டயர் உருட்டுதல் (100 மீ) போன்ற போட்டிகளும் இடம் பெற்றன.

இதன் போது மிகவும் பலமான வலுமிக்க படைப் பிரிவாக 11ஆவது கஜபா படையணி 8.974 புள்ளிகளை இலங்கை இலேசாயுத காலாட் படையணியுடன் போட்டியிட்டு 7.601 வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.

இந் நிகழ்வின் இறுதிக் கட்ட அம்சமாக அன்றய தினம் மாலை வேளை பிரதம அதிதியாக கலந்து கொண்ட தளபதியான மேஜர் ஜெனரல் நிஷ்ஷங்க ரணவன அவர்களால் சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் போன்றன வழங்கப்பட்டதுடன் 57ஆவது படைப் பிரிவு மற்றும் 66ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிகள் மற்றும் பல உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். best Running shoes | Nike Shoes