Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd September 2018 16:37:56 Hours

முல்லைத்தீவு கரையோர பகுதிகள் இராணுவத்தினரால் சுத்திகரிப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது வழிக்காட்டலின் கீழ் தேசிய கரையோர மற்றும் கடல்சார் வள பாதுகாப்பு திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் கடலோர பகுதிகளில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகள் (21) ஆம் திகதி வெள்ளிக் கிழமை முல்லைத்தீவு புதுமத்தாளன் மற்றும் வட்டுவாகால் கடலோர பகுதிகளில் இடம்பெற்றன.

59 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 681 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த சிரமதான பணிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த சிரமதானம் இடம்பெற்ற இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ஆர் கேதிஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாவட்ட செயலாளர் தனபால சுந்தரம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரதீபன், கரைதுறைபற்று பிரதேச செயலாளர் பிரதாபன் அவர்கள் வருகை தந்து பார்வையிட்டனர். affiliate tracking url | Nike Air Max