Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th September 2018 10:48:05 Hours

யாழ் பாதுகபாப்பு படையினரால் வீட்டுத் திட்டங்களுக்கு உதவிகள்

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குரிய பிரதேசத்தில் வாழ்வாதாரத்தில் கீழ் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த இரு குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் இரு வீடுகள் நிர்மானிக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.

இந்த வீடுகளுக்கான நிதி அனுசரனைகளை மோகன் சங்கர் மற்றும் திருமதி வதனி சங்கர் அவர்கள் வழங்கியிருந்தனர். இவர்களது புதல்வனான விகாஷ் சங்கரது 22 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இக்குடும்பத்தினருக்கு இந்த நிதியுதவியினை வழங்கியிருந்தனர்.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது வழிக்காட்டலின் கீழ் 2 ஆவது கெமுனு படையணி, 7 ஆவது கஜபா படையணியின் ஒத்துழைப்புடன் இந்த வீடுகளுக்கான கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த வீடுகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் இந்த வீட்டு உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இப்பிரதேச மக்கள் இணைந்திருந்தனர். short url link | Nike for Men