Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th August 2018 16:56:13 Hours

புதிதாக பதவியுயர்த்தப் பட்ட உயரதிகாரிக்கு வரவேற்பு நிகழ்வு

புதிதாக மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்ட கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த சுராஜ் பஸ்நாயக அவர்களுக்கு குருவிடையிலுள்ள கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் ஜூலை மாதம் 11 ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.

படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் சுராஜ் பஸ்நாயக அவர்களை கெமுனு ஹேவா படைத் தலைமையகத்தின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் திலக் பிரேமதிலக அவர்கள் வரவேற்றார். இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ உட்பட இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இவரை வரவேற்றனர்.

பின்னர் இவர் படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள இராணுவ ஞாபகார்த்த நினைவு தூபி வளாகத்தினுள் சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி தனது கௌரவ மரியாதையினை செலுத்தினார்.

பின்னர் படையினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்துபசார நிகழ்வில் பங்கேற்றுக் கொண்டார்.

மேஜர் ஜெனரல் சுராஜ் பஸ்நாயக அவர்கள் மின்னேரியவில் உள்ள காலாட் பயிற்சி கட்டளை தளபதியாக தற்பொழுது கடமை வகிக்கின்றார். இதற்கு முன்பு தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகவும், கலாஓயா தொழில் சார் பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரியாகவும், மாதுறுஓயா இராணுவ பயிற்சி முகாமின் கட்டளை அதிகாரியாகவும், கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் படைத் தளபதியாகவும், இராணுவ உயவியல் நடவடிக்கை பணியகத்தின் பணிப்பாளராகவும், இராணுவ ஆட்சேர்ப்பு பணியகத்தின் பணிப்பாளராகவும் கடமை வகித்துள்ளார்.

மேலும் இராணுவத்தில் 33 வருட கால சேவையை முழுமையாக்கியுள்ளார். Nike air jordan Sneakers | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger