Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th July 2018 08:51:16 Hours

இராணுவ பொது சேவைப் படையணி தலைமையகத்தில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

பனாகொடையில் அமைந்துள்ள இராணுவ பொது சேவைப் படையணி தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது ஆசிர்வாதத்துடன கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றன.

இந்த படையணியின் பிரதி கட்டளை தளபதியான கேர்ணல் டப்ள்யூ.ஏ.ஏ.சி.பி வேரகொட, கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன பௌத்த சமய ஆசீர்வாத பூஜைகளின் பின்பு இந்த அடிக்கல் நாட்டு விழா ஆரம்பமானது. இந்த கட்டிட நிர்மான பணிகளுக்கான 15 மில்லியன் ரூபாய் செலவு மதீப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இராணுவ பொது சேவைப் படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டப்ள்யூ. ஆர் பலிககார, இராணுவ நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.ஏ.டி.எஸ்.எல் பெரேரா, இராணுவ சம்பளம் மற்றும் கொடுப்பணவு பணியகத்தின் பணிப்பாளர் பிரகேடியர் எல். விஜயசுந்தர , இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.buy shoes | Autres