Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th July 2018 13:07:35 Hours

வன்னி, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி படையினருக்கு கருத்தரங்குகள்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் (21) ஆம் திகதி சனிக் கிழமை மௌவி முகம்மட் இர்சார்ட் ராவகி அவர்களினால் 'உலக சமாதானத்திற்கான மதத்தின் தாக்கம்' தொடர்பான விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விரிவுரைகளை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேர்ணல் பதவி நிலை அதிகாரி கேர்ணல் டீ.பீ.சி ஜயசிங்க உட்பட இராணுவத்தின் 680 படையினரின் பங்களிப்புடன் இடம்பெற்றன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் பணிப்புரைக்கமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 'உலகமயமாக்கல் மற்றும் இலங்கை பொருளாதாரம்' தொடர்பான விரிவுரைகள் இடம்பெற்றன.

பேராசிரியர் பந்துல ஜயதிலக மற்றும் இரு பெண்களினால் 'சூழல் நட்பு தொண்டர்கள்' அமைப்பினால் 54 ஆவது படைப் பிரிவில் விரிவுரைகள் இடம்பெற்றன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 10 அதிகாரிகள் மற்றும் 291 படையினரது பங்களிப்புடன் தொழில் பயிற்சிகள் தொடர்பான விரிவுரைகள் இடம்பெற்றன. இந்த விரிவுரைகளை இராணுவ கலாஒயா தொழில் பயிற்சி நிலையத்திலுள்ள லெப்டினன்ட் கேர்ணல் சசிக பெரேரா அவர்களினால் (26) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றன. Sports News | Jordan Shoes Sale UK