Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd May 2018 18:17:01 Hours

இலங்கை இராணுவ பொலிஸ் சேவை படையணியில் புதிதாக பியிற்ச்சி பெற்று வெளியேறும் 88 சிப்பாய் வீரர்கள்

மின்னேரிய, கிரிந்தலேயில் அமைந்திருக்கும் இலங்கை இராணுவ பொலிஸ் சேவைப் படையணியின் பயிற்ச்சி முகாமில் இல.72 இல் அடிப்படை பயிற்ச்சியை வெற்றிகரமாக முடித்த 88 சிப்பாய் வீரர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி வெளியேறினர்.

முன்று மாதத்துக்கு மேல் அடிப்படை பயிற்ச்சியை முடித்து இவ் வெளியேறும் நிகழ்வுக்கு பிரதான அதிதியாக மின்னேரிய, கிரிந்தலேயில் அமைந்திருக்கும் இலங்கை இராணுவ பொலிஸ் சேவைப் படையணியில் பயிற்ச்சி முகாமின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கே.ஏ.கே.எஸ் பிரசன்ன அவர்களின் அழைப்பை ஏற்று நகர அபிவிருத்தி அமைச்சின் ஒருங்கிணைப்பாளர் இலங்கை இராணுவ பொலிஸ் சேவைப் படையின் பிரிகேடியர் டி.பி.எம்.டி உபயவர்தன அவர்கள் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் திறமையானவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது.

இப் பயிற்சியில் அனைத்து பயிற்ச்சிகளிளும் திறமையை வெளிகாட்டிய வீரரான சிப்பாய் வீரர் எஸ்.ஏ.வீ.டி செனவிரத்ன மற்றும் சிறந்த துப்பாக்கி வீரராக சிப்பாய் வீரர் எச்.ஆர்.டி.கே சந்ரரத்ன அவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

அதே போல் திறமையான குழு தலைவராக லெப்டினென்ட் பி.எம்.பி.என் தனவஞ்ச அவர்களுக்கும் மிக திறமையான குழு தலைவராக சாஜன் மற்றும் அணிக்கு குரல் கொடுக்கும் திறமையானவரான சாஜன் எஸ். ஏம்.பி.எம். ஹேரத் மற்றும் கோப்ரல் டபில்யூ.டி.ஜீ.பி.எஸ் கீர்த்திசிங்க அவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

Nike footwear | FASHION NEWS