Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th February 2018 10:17:05 Hours

இராணுவத் தளபதியவர்களால் சார்ஜன்ட் மேஜர்களுக்கான உரை

இராணுவத்தின் அதிகாரிகள் அல்லாத படைத் தலைமையகங்களின் 178 சார்ஜன்ட் மேஜர்களுக்கான தலைமைத்துவப் பயிற்ச்சிகள் மற்றும் குழுச் செயற்பாட்டு அபிவிருத்தி தொடர்பிலான மூன்றுநாள் (15 – 17 பெப்ரவரி) பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் குக்குலேகங்கை லாயா விடுதி வளாகத்தில் கடந்த சனிக் கிழமை (17) இடம் பெற்றது.

இப் பயிற்ச்சிப் பட்டறையானது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களினால் பணியாளர் நிறுவாகப் பணிப்பகத்திற்க்கு வழங்கப்பட்ட வழிகாட்டலின் கீழ் படைத் தலைமையகங்களின் சார்ஜன்ட் மேஜர்களுக்கான தலைமைத்துவப் பயிற்ச்சிகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில் கைந்தேர்ந்த விரிவுரையாளர்களினால் இத் தலைமைத் துவப் பயிற்ச்சிகள் வழங்கப்பட்டதோடு இதன் போது தலைமைத்துவம்' 'புதுமையான சிந்தனை' 'தலைமைத்துவ குணங்கள்' 'ஊழியர்களை மேம்படுத்துதல்' 'குழு வேலை மற்றும் கூட்டு தனிப்பட்ட பொறுப்பு' 'போட்டித்தன்மை' 'சகிப்புத்தன்மை' போன்றன இப் பயிற்ச்சிகளில் உள்ளடக்கப்பட்டு குக்குலேகங்கை லாயா விடுதி பூங்காவில் இடம் பெற்றதுடன் இப் படைத் தலைமையக சார்ஜன்ட் மேஜர் அவர்கள் மலை ஏறுதல் கயிறு சமநிலைப்படுத்தல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

இப் பயிற்சிகளுக்கான முதல் நாள் (15) கருத்தரங்கின் போது இராணுவத் தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

அந்த வகையில் இப் பட்டறையின் இறுதி நாளான சனிக் கிழமை (17) திகதி இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் படைத் தலைமையகங்களின் 178 சார்ஜன்ட் மேஜர்களுக்கான தலைமைத்துவப் பயிற்ச்சிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு இவர்ளுக்கான பயிற்சிகள் வழங்குவதற்கான நோக்கம் தொடர்பான கருத்துக்களையூம் தளபதியவர்கள் பகிர்ந்து கொண்டார்.

இந் நிகழ்வில் இராணுவப் பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர பணியாளர் நிறுவாகப் பணிப்பக பணிப்பாளரான பிரிகேடியர் தேவிந்த பெரோரா இராணுவ உயர் அதிகாரிகள் படையினர் போன்றௌர் கலந்து கொண்டனர்.

jordan release date | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf