Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th February 2018 13:41:46 Hours

70ஆவது சுதந்திர தின அணிவகுப்பு

நம் தாய் நாட்டின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வூகள் இராணுவத் தளபதியதன லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமைத்துவத்துடன் இராணுவ 160 அதிகாரிகள் மற்றும் 3638 படையினரின் பங்களிப்போடு அணிவகுப்பு நிகழ்வூகள் கோல்பேஸ் வளாகத்தில் சனிக் கிழமை (4) இடம் பெற்ற வண்ணம் உள்ளது.

இந் நிகழ்வுகள் கௌரவமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் முப்படையின் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் போன்றௌரின் பங்களிப்போடு இடம் பெற்றது.

அந்த வகையில் 70ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழுப்பில் தேசியக் கொடி உயர்த்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதுடன்; இராணுவத்தினர் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கொடெட் படையினர் போன்றௌர் ஜனாதிபதி உள்ளடங்களாக நாட்டு மக்களிற்கு மரியாதை செலுத்தினர்.

இந் நிகழ்விற்கு கௌரவமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பாராளுமன்ற பேச்சாளர்கள் தலைமை நீதிபதி; உள்நாட்டு விவகார அமைச்சரான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மேற்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் ஆளுனர்கள் மேற்கு மாகான முதலமைச்சர் ஜனாதிபதிச் செயலாளர் பிரதம மந்திரிச் செயலாளர் பாதுகாப்பு செயலாளர் அமைசர்களின் செயலாளர்கள் பாதுகாப்பு செயலாளர் முப் படைத் தளபதிகள் பொலிஸ் மா அதிபர் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் பல விசேட அதிதிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

இளவரசர் எட்வட் இளசரி சோபி சீனா மற்றும் ஜப்பானிய இரு விசேட பிரதிநிதிகள் போன்றௌர் வருகை தந்தனர்.

இவ்வாறு வருகை தந்த கௌரவமிக்க ஜனாதிபதியவர்களை உள்நாட்டு விவகார அமைச்சர் வரவேற்றதுடன் இராணுவ பொலிஸ் மற்றும் முப்படையினரின் எக்கால இசையும் இசைக்கப்பட்டது.

சில நிமிடங்களின் பின்னர் பாதுகாப்பு செயலாளர் முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் போன்றௌரால் வரவேற்றகப்பட்ட ஜனாதிபதியவர்கள் தேசியக் கொடியை உயர்த்துகையில் பெரை போன்ற தாள வாத்தியங்கள் 110 மாணவர்களின் தலைமையில் இசைக்கப்பட்டு தேசிய கீதமும் பாடப்பட்டது.

அதன் பின்னர் கொழுப்பின் மூன்று பாடசாலைகளை உள்ளடக்கிய 25மாணவிகளினால் ஜயமக்ங்கள இசை இசைக்கப்பட்டு ஜனாதிபதியவர்களுக்கு ஆசிகள் வழங்கப்பட்டதோடு தேசத்திற்காக உயிர் நீத்தவர்களை நினைவூ கூறும் நோக்கில் இரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மேலும் முப்படையினரின் அணிவகுப்பு முறைகள் 8 அதிகாரிகள் மற்றும் 96 படையினர் உள்ளடங்களான குழுவினர் இலங்கை படைக் கலச் சிறப்பணின் மேஜர் துமிந்த ரசிக்க அவர்களின் தலைமையில் வழிநடத்தப்பட்டது. படைத் தளபதியான ஜனாதிபதி அவர்களை 21 துப்பாக்கிகளைத் தாங்கிய படையினர் வழிநடத்திச் சென்றனர்.

அதன் பின்னர் கௌரவமிக்க ஜனாதிபதியவர்கள் நாட்டு மக்களிற்கான உரையை நிகழ்த்தியதுடன் சுதந்திர தினத்திற்கான வாழ்த்துக்களையூம் தெரிவித்துள்ளார்.

அவரது உரையின் பின்னர் முப்படை அதிகாரிகள் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் கொடெட் படையினர் போன்றௌர் இராணுவ விதிமுறைகளுக்கமைவாக அணிநடை நிகழ்வை மேற்கொண்டனர்.

அந்த வகையில் இராணுவ அணிவகுப்பானது 124 அதிகாரிகள் மற்றும் 3389 படையினர் உடன் இயந்திரவியல் படையின் 36அதிகாரிகள் மற்றும் 249 படையினர் இவ் அணிவகுப்பில் காணப்பட்டனர்.

இதன் போது ஆயிரக்கணக்கிலான படையினர் தமது அணிவகுப்பின் மூலம் மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களை வரவேற்றார்.

மேலும் கலாச்சார நடனங்கள் போன்றன பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.

அந்த வகையில் மத குருமார்கள் மற்றும் பாரிய அளவிலான மக்கள் சுதந்திர தின நிகழ்வை பார்வையிடும் நோக்கில் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் இச் சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தளபதியூம் இலங்கை பொறியியலாளர்ப் படையணியின் கேர்ணல் கெமடாட் ஆன மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்கள் மற்றும் இலங்கை இலேசாயூத காலாட் படையணியின் பிரிகேடியர் சிஷாந்த வடுகொடபிட்டிய அவர்களின் தலைமையில் கட்டளை வழங்கப்பட்டு வழிநடத்தப்பட்டதோடு இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் ஆணைச் சீட்டு அதிகாரி 1 டபிள்யூ எம் எஸ் பி விஜேசிங்க அவர்களினாலும் வழிநடத்தப்பட்டது.

அந்த வகையில் இன்று மதியம் (4) கடற் படையினரால் நாட்டு மக்களுக்காக 25 துப்பாக்கிகளைச் சுமந்த படையினரால் கொழும்பு சைத்திய வீதியில் உள்ள லைட் ஹவூசில் இடம் பெறவுள்ளது.

Sports brands | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos